இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்

இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
News Image

"இன்ஸ்டாகிராம் காதல் - அந்தரங்க காட்சிகளை வெளியிடுவேன்"

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயதுடைய சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிட்டு வந்த அந்தச் சிறுமிக்கு , தடிக்காரகோணம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான அஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில், நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து , அஜனுடன் சிறுமி பூங்கா , கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அப்போது அஜன் சிறுமியுடன் தனிமையில் இருந்த அந்தரங்க காட்சிகளை பதிவு செய்ததாகவும் , பின்னர் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்ட போது அந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதாகக் கூறி சிறுமியை மிரட்டி அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

"மிரட்டி பாலியல் வன்கொடுமை"

இதனால் அச்சமடைந்த சிறுமி இது குறித்து தனது அண்ணன் உறவு முறையில் உள்ள விவேக்கிடம் தெரிவித்துள்ளார். ஆனால், விவேக்கும் சிறுமிக்கு உதவி செய்வதாக ஏமாற்றி சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் இந்த விவரத்தை அறிந்த விவேக்கின் நண்பரான பரப்புவிளை பகுதியைச் சேர்ந்த தினேஷும் சிறுமியை அணுகி, அவரது பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி நம்பிக்கையுடன் பேசி வந்திருக்கிறார்.

பின்னர், கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி வீட்டில் இருந்த சிறுமியை வெள்ளிச் சந்தை பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து சிறுமிக்கு கட்டாயப்படுத்தி மது கொடுத்த தினேஷ் தனது நண்பரான நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஆன்றோ ஜெரிஷுடன் சேர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். பின்னர், அவர்களிடம் இருந்து தப்பித்து சிறுமி வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இதனிடையே , சிறுமி வீட்டில் இல்லாததால் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வெள்ளிச் சந்தை போலீசார் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் ஒரு வாரத்துக்குப் பிறகு சிறுமி வீடு திரும்பிய நிலையில், தனக்கு நேர்ந்த சம்பவங்களை பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிறுமியிடம் விசாரணை நடத்திய குளச்சல் அனைத்து மகளிர் போலீசார், அவரை உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சிறுமியின் புகாரின் அடிப்படையில் அஜன், விவேக், தினேஷ், ஆன்றோ ஜெரிஷ் ஆகிய 4 பேர் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த 4 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் அஜன் மற்றும் விவேக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த தினேஷ் மற்றும் ஆன்றோ ஜெரிஷின் செல்போன் டவர் லொக்கேஷனை போலீசார் கண்காணித்தனர். இதன் அடிப்படையில் இருவரையும் சென்னையில் வைத்து கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks