தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வீரமணி தொடர்பான விவகாரம் தான். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் வீரமணி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறப்பு புலனாய்வு குழு

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் தப்பித்துவிடக்கூடாது என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கை தேன்மொழி ஐபிஎஸ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமார் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீரமணியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வழக்குகள்

இதனிடையே தொழில் அதிபர் வீரமணியால் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்ட 16 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படை வீரமணியின் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே இரண்டு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குண்டர் சட்டம்

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணி, அவருக்கு உதவியாக இருந்த சாந்தி அவரின் கணவர் சிம்ஹான் ஆகிய மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய சென்னை மாநகர் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவுயப்பட்டுள்ளது.

Source: Read Full Article