இந்தியாவில் உணவூட்டச் சேர்க்கைக்கு நல்ல சூழல்! — நிஃப்டெம் கருத்தரங்கில் மத்திய இணைச் செயலாளர் தகவல்

இந்தியாவில் உணவூட்டச் சேர்க்கைக்கு நல்ல சூழல்! — நிஃப்டெம் கருத்தரங்கில் மத்திய இணைச் செயலாளர் தகவல்
News Image

தஞ்சாவூர்: இந்தியாவில் உணவூட்டச் சேர்க்கையை (Food Fortification) பெரிய அளவில் செயல்படுத்துவதற்கான நல்ல சூழல் உருவாகியுள்ளதாக, இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை (நிஃப்டெம்) கல்வி நிறுவனத்தில் நிறுவன தொடக்க நாள் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரஞ்சித் சிங் பங்கேற்று பேசினார்.

ஊட்டச்சத்து அவசியம்

இந்தியாவின் எதிர்கால உணவு முறைகளில் ஊட்டச்சத்து, நவீன தொழில்நுட்பம் மற்றும் பெரிய அளவில் செயல்படுத்தும் திறன் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. உணவூட்டச் சேர்க்கை என்பது புதிதாக அறிமுகமான நடைமுறை அல்ல என்றாலும், மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்களை அனைவருக்கும் எவ்வாறு எளிதாகக் கொண்டு சேர்ப்பது என்பது முக்கிய சவாலாக உள்ளது.

மக்கள் தினசரி உட்கொள்ளும் அரிசி, கோதுமை, பால், சமையல் எண்ணெய், உப்பு போன்ற உணவுப் பொருட்களின் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும். இதனால் அனைவரும் தனியாக மாத்திரைகள், கேப்சூல்கள் அல்லது கூடுதல் சத்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் குறையும்.

தர வழிகாட்டுதல்கள்

இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தை கண்காணிக்கும் FSSAI அமைப்பு, பல்வேறு முக்கிய உணவுப் பொருட்களில் உணவூட்டச் சேர்க்கைக்கான தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஏற்கெனவே வகுத்துள்ளது.

அடுத்த கட்டமாக, உணவூட்டச் சேர்க்கை நடைமுறையை குறைந்த செலவில், அதிக திறனுடன், பெரிய அளவில் செயல்படுத்தக்கூடிய வகையில் மேம்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, உணவு பதப்படுத்துதல், சேமிப்பு மற்றும் விநியோகத்தின் போது சேர்க்கப்படும் நுண்ணூட்டச்சத்துக்கள் பாதிக்கப்படாமல் நிலைத்திருப்பது அவசியம்.

சுவை, நிறம் மாறக்கூடாது

உணவூட்டச் சேர்க்கை மேற்கொள்ளும்போது உணவின் நிறம், சுவை, மணம், அமைப்பு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படக்கூடாது. அப்போதுதான் நுகர்வோர் மத்தியில் அதற்கான ஏற்றுக்கொள்ளும் தன்மை அதிகரிக்கும்.

எனவே, உணவூட்டச் சேர்க்கை என்பது ஊட்டச்சத்து சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; உணவு பதப்படுத்தும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய முக்கிய சவாலாகவும் உள்ளது.

சிறு உற்பத்தியாளர்களுக்கும் தொழில்நுட்பம்

இந்தியாவில் 90 சதவீதத்துக்கும் அதிகமான உணவு பதப்படுத்தும் தொழில் சிறு மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களை உள்ளடக்கியதாக இருப்பதால், அவர்களுக்கும் ஏற்ற எளிய தரக்கட்டுப்பாட்டு முறைகள், குறைந்த செலவிலான கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை தஞ்சாவூர் நிஃப்டெம் உருவாக்க வேண்டும் என ரஞ்சித் சிங் வலியுறுத்தினார்.

நிஃப்டெம் மையம் ஆராய்ச்சி நிறுவனமாக மட்டுமின்றி, தொழில்நுட்பப் பயிற்சி வழங்கும் தளமாகவும் செயல்பட வேண்டும். தொழில்துறையினர் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், தொடக்க நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பங்களைச் சோதிக்கவும், மாணவர்கள் நேரடி அனுபவம் பெறவும் இந்த மையத்தை பயன்படுத்த வேண்டும்.

தேசிய தளமாக மாற வேண்டும்

தஞ்சாவூர் நிஃப்டெம் மையம் எதிர்காலத்தில் உணவூட்டச் சேர்க்கைக்கான தேசிய அளவிலான முக்கிய தளமாக உருவாக வேண்டும். தொழில்துறை, கல்வி நிறுவனங்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் இணைந்து செயல்படுவதன் மூலம் ஆரோக்கியமான, சத்தான மற்றும் சுயசார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க இந்த மையம் முக்கிய பங்காற்ற முடியும் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நிஃப்டெம் புலத் தலைவர் என்.வெங்கடாஜலபதி வரவேற்றார். இயக்குநர் வி.பழனிமுத்து நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். இமாச்சலப்பிரதேச இந்திய உணவுக் கழக இயக்குநர் குமத்சிங், கெயின் இந்தியா இயக்குநர் புவனேஸ்வரி பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பதிவாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks