மதுராந்தகம் இடைத்தேர்தல் நடக்கும் வரலாற்று சிறப்புமிக்க கூட்டம் இது. எத்தனையோ இடைத்தேர்தல்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது. ஆனால் இது இப்போது நடக்கும் தேர்தலை போல கிடையாது. என்றைக்கு ஒரு கட்சியின் தலைவர், அக்கட்சியின் கொள்கையை மீறி, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கையை மீறி செயல்படுகிறார். அதனை எதிர்த்து, தன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு துணிச்சலாக தவெகவில் விஜய் தலைமையில் இணைந்து மரகதம் குமரவேல் இடைத்தேர்தலை சந்திக்கிறார்.

எப்போது எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் சேர நினைத்தாரோ, அதை ஒரு துளி கூட விரும்பாமல் எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசியாக இருந்த மரகதம் குமரவேல் கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். நான் ஏன் மீண்டும் மீண்டும் இந்த தேர்தல் முக்கியம் என சொல்கிறேன் என கேட்டால், இப்படிப்பட்ட கட்சிகள் இனி ஒருபோதும் தமிழ்நாட்டில் இருக்கவே கூடாது. இத்தகைய எண்ணம் கொண்ட தலைவர்கள் இருக்கக்கூடாது. எல்லாவற்றையும் மீறி தன்னுடைய சுயநலம் தான் முக்கியம் என ஒரு கட்சி தலைவர் முடிவெடுத்தாரோ அங்கு மக்கள் நலம் இருக்காது.

திமுக, அதிமுகவும் எப்படியெல்லாம் 50 ஆண்டுகள் எதிர்த்து ஆட்சி செய்தார்கள். அவற்றையெல்லாம் மறந்து விட்டு ஒரே நாளில் விஜய்க்கு எதிராக ஒன்று சேர்ந்து ஆட்சியமைப்போம் என முடிவு செய்கிறார்கள். இப்படி ஒரு சூழல் எதிர்பார்க்காத ஒன்று. அப்படிப்பட்ட நிலையில் தான் இயற்கையான ஒரு கூட்டணி தவெக தலைமையில் அமைந்தது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதனை விஜய் நிறைவேற்றியுள்ளார். எல்லாரும் சேர்ந்து ஆட்சியை நடத்தினால் தான் அது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும்.

இப்போது மட்டுமல்ல இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற முறை தான் இருக்கும். மக்கள் நலனை கருதி விஜய் தவெக முதல் மாநாட்டில் அதை அறிவித்து விட்டார். திமுகவுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வேலைகளை அந்த குடும்பத்தினர் சரியாக செய்வார்கள். 1994ல் அப்படி ஒரு நெருக்கடியை வைகோ ஏற்படுத்தினார். இன்னும் 2 ஆண்டுகளில் அதிமுக என்ன மாதிரியான நிலைமையில் இருக்கிறதோ, அதைவிட மோசமான நிலைக்கு திமுகவை ஸ்டாலினும், உதயநிதியும் கொண்டு போய் நிறுத்துவார்கள். அடுத்தடுத்து பல இடைத்தேர்தல்கள் வரும்.

எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு முறையும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்று எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இங்கே இருந்துக் கொண்டு எப்படி திமுகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முடிவு செய்தோம் என யோசித்துப் பாருங்கள். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை தயவு செய்து தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்காதீர்கள். அதன் உள்ளே செல்லும் அருகதை எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது என சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

Source: Read Full Article