நல்லது நடக்க திமுக - அதிமுக சேர்ந்தாலும் தப்பில்ல.. தாராபுரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பேச்சு!

நல்லது நடக்க திமுக - அதிமுக சேர்ந்தாலும் தப்பில்ல.. தாராபுரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பேச்சு!
News Image

தன்னுடைய சுயநலத்துகாக தாராபுரத்தில் சத்யபாமா இடைத்தேர்தலை கொண்டு வந்துள்ளார் என முன்னாள் திமுக அமைச்சர் சாமிநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தாராபுரத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் சாமிநாதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “தாராபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட விஜய், திமுக வும், அதிமுகவும் கூட்டணி வைத்ததாக விமர்சித்துள்ளாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் சாமிநாதன், கூட்டுச் சேர்ந்துள்ளதாக விஜய் சொல்லும் நிலையில், அப்படி சேர்ந்திருந்தால் எப்படி தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தியிருக்க முடியும்?.. அப்படி திமுக, அதிமுக கூட்டு சேர்ந்தால் அதனால் மக்களுக்கு என்ன தீமை ஏற்பட முடியும்?.. எதிரிக்கு எதிரி நண்பன் தான். அந்த வகையில் சில இடங்களில் கூட்டு சேர்ந்திருக்கலாம். கடந்த காலத்தைப் பார்த்தால் திமுகவில் இருந்து மதிமுக பிரிந்தபோது எங்களை வைகோ கடுமையாக விமர்சித்தார். மீண்டும் எங்களுடன் கூட்டணி வைத்தாரே.. தேர்தலுக்கு அப்பாற்பட்டு திமுக - மதிமுக கட்சி இணைக்கக்கூட பேச்சுவார்த்தை நடந்தது. அதனால் இதனையெல்லாம் பெரிதாக எடுக்க வேண்டாம்.

யார் இணைந்தால் நன்மை ஏற்படும் என்பது புரிந்து மக்கள் ஏற்றுக்கொண்டால் நல்லது. இன்றைக்கு மக்கள் சினிமா மோகத்தில் இருந்ததால் வாக்குகள் சிதறி விட்டது. இந்த முறை அந்த வாக்குகள் திமுகவுக்கே வந்து சேரும். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை மக்கள் இப்போது தான் புரிந்துக் கொள்கிறார்கள். 150 நாட்கள்  தவெக ஆட்சியில் எதுவும் மக்களுக்கு நன்மை ஏற்படவில்லை. பெயரளவுக்கு திட்டத்தை அறிவித்து விட்டு மக்களுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ளார்கள். சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டு விட்டது. மக்கள் சலிப்பான நிலைமையில் தான் இருக்கிறார்கள்" என கூறினார்.

தொடர்ந்து விஜய் முன்னிலையில் மேடையில் தவெக வேட்பாளர் சத்யபாமா கண்ணீர் விட்டு அழுதது பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “சத்யபாமாவுக்கு போகும் இடத்தில் எல்லாம் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதனால் மனசாட்சிக்கு பயந்து அழுதிருப்பார் என நினைக்கிறேன். வாக்களித்த மக்களுக்கும், இருந்த கட்சிக்கும், அவருக்கு உழைத்த தொண்டர்களுக்கும் துரோகம் செய்துள்ளார். என் தொகுதிக்கு இந்த பணிகள் நடக்கவில்லை. அதனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என சொன்னால் கூட ஏற்க முடியும். சுயநலத்துக்காக பதவியை ராஜினாமா செய்து விட்டு தேவையற்ற வகையில் இடைத்தேர்தலை திணித்திருக்கிறார்” எனவும் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks