Chennai Bypass: ஆர்.ஏ. புரம் மற்றும் அடையாறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26 கோடி ரூபாயில் க்ரீன்வேஸ் சாலையில் புதிய சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டது.

15 மாதங்களாக முடங்கிக் கிடக்கும் பணிகள்:

வேகமாக வளர்ந்து வரும் பெருநகரமான சென்னையில், போக்குவரத்து நெரிசல் என்பது மிகவும் முக்கியமான பிரச்னையாக உள்ளது. இதனை குறைக்கும் நோக்கில் பல்வேறு சாலை மற்றும் மேம்பாலங்களை அமைக்கும் பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆர்.ஏ.புரம், சாந்தோம் மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, க்ரீன்வேஸ் சாலையை துர்காபாய் தேஷ்முக் சாலையுடன் இணைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்காக 630 மீட்டர் புறவழிச் சாலையின் திட்டமிடப்பட்டது. ஆனால் அதன் கட்டுமானப் பணிக்கு, கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக திட்டமே முடங்கிக் கிடக்கிறது.

ரூ.26 கோடி மதிப்பிலான திட்டம்:

சாலைக்கான திட்டம் என்பது, டி.ஜி.எஸ். தினகரன் சாலை (கிரீன்வேஸ் சாலை) மற்றும் ஆர்.கே.மட் சாலை சந்திப்பிலிருந்து, துர்காபாய் தேஷ்முக் சாலையில் உள்ள அடையாரில் இருக்கும் திரு.வி.க. பாலம் வரை நீள்கிறது. 10.5 மீட்டர் அகலமுடைய மூன்று வழி ஒருவழி (One-Way) புறவழிச் சாலையாக அமைக்க முன்மொழியப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத் துறை கடந்த ஆண்டு பிப்ரவரியில் `26.5 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை வழங்கியது. திரு.வி.க. பாலம் அருகே பணிகள் தொடங்கப்பட்ட போதிலும், சில மாதங்களிலேயே அவை நிறுத்தப்பட்டன. நிலுவையில் உள்ள ஒழுங்குமுறை அனுமதி காரணமாக அந்த பணிகள் தற்போது வரை மீண்டும் தொடங்கப்படவே இல்லை.

இதையும் படியுங்கள்: TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை

சாலை திட்டத்தில் உள்ள பிரச்னை என்ன?

டி.ஜி.எஸ். தினகரன் சாலை மற்றும் ஆர்.கே. மடம் சாலை சந்திப்பில் முன்மொழியப்பட்ட சாலை தொடங்கி, அரசு இசைக் கல்லூரிக்கு சுமார் 50 மீட்டர் முன்பு அமைந்துள்ள செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையம் வழியாகச் சென்று, திரு வி கா பாலத்தின் கரையில் முடிவடையும் வகையில் சாலை திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இசைக் கல்லூரிக்கு அருகிலுள்ள நிலத்திலிருந்து, இந்தச் சாலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரிக்கு அருகிலுள்ள நிலத்தின் வழியாகச் சென்று பாலத்துடன் இணையும். இந்தச் சாலை பாலத்திற்கு அருகில் அடையாறு ஆற்றங்கரையோரமாகச் செல்வதால், தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி அவசியமாகிறது.இதக்ற்காக ஏற்கனவே அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்ட நிலையிலும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை என கூறப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் எப்படி குறையும்?

தற்போது, சந்தோம், ஆர்.கே. மட் சாலை மற்றும் க்ரீன்வேஸ் சாலையை இணைக்கும் சாலைகளில், உச்ச நேரங்களில் இரு திசைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகனங்கள் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்டு நிற்கின்றன. அதனை குறைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த புறவழிச்சாலையானது, மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் துர்காபாய் தேஷ்முக் சாலைக்குள் நுழையாமல், அடையாற்றில் உள்ள திரு.வி.க. பாலத்தை நோக்கி மடைமாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புறவழிச்சாலை அமைக்கப்பட்டது, துர்காபாய் தேஷ்முக் சாலையில் உள்ள நடுப்பகுதியை அகற்றி, அடையாரிலிருந்து ஆர்.ஏ.புரம் மற்றும் அபிராமபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்காக அந்தச் சாலையை ஒருவழிப் பாதையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. மயிலாப்பூர், சந்தோம் மற்றும் ஆர்.ஏ.புரத்திலிருந்து வரும் வாகனங்கள் அடையாறு பகுதியை அடைய புதிய சாலை வழியாகத் திருப்பி விடப்படும். எனவே இந்த திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் விரைந்து அனுமதி கொடுக்க வேண்டும் என்பதே சென்னை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source: Read Full Article