ரூ.187 கோடி மிச்சம்.. துவரம் பருப்பு கொள்முதல் விலை குறைந்தது எப்படி? - TNCSC இயக்குநர் ஷில்பா பிரபாகர் விளக்கம்!

ரூ.187 கோடி மிச்சம்.. துவரம் பருப்பு கொள்முதல் விலை குறைந்தது எப்படி? - TNCSC இயக்குநர் ஷில்பா பிரபாகர் விளக்கம்!
News Image

திமுக ஆட்சியை விட தவெக ஆட்சியில் குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதன் மூலம் அரசுக்கு ரூ.187.56 கோடி சேமிப்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொண்டு வருவதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

நிதி நிலைமையை உயர்த்த நடவடிக்கை

தமிழக வெற்றிக் கழக அரசு தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு வருவாயை பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டெண்டர் விவகாரம் தொடங்கி ஆட்கள் நியமனம் வரையிலான பல்வேறு விஷயங்களில் நடவடிக்கை எடுத்து வருவதால் அரசு கஜானாவுக்கு வரும் பணத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் துவரம் பருப்பை கொள்முதல் செய்ததன் மூலம் ரூ.187.56 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

துவரம் பருப்பு கொள்முதல்

அதாவது, திமுக ஆட்சிக்காலத்தில் துவரம் பருப்பு கொள்முதல் தொடர்பாக வெளியிடப்பட்ட டெண்டர் மே 2ம் தேதி இறுதி செய்யப்பட்டது. அதன்மூலம் கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பு கடந்த ஆகஸ்ட் மாத இறுதி வரை விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு ரூ.30 என்ற விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அரசால் 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு விநியோகத்திற்காக  கொள்முதல் செய்யப்படுகிறது.  88% மக்கள் இந்த பருப்பை பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் விநியோகம் செய்வதற்கான துவரம் பருப்பு கொள்முதல் தொடர்பான டெண்டர் ஆறு ஒப்பந்தத்தாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கிலோ ரூ.77.89 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனிடையே திமுக அரசு ஒரு கிலோ பருப்பை ரூ.109.15 என்ற விலையில் கொள்முதல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இது சமீபத்திய சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்  பருப்பின் கொள்முதல் செலவில் ஏற்பட்ட செலவு குறைப்பு, திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. திமுக அரசு கொள்முதலுக்காக அதிக விலை கொடுத்ததா என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநரான ஷில்பா பிரபாகர் சதீஷ் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி அனைத்து டெண்டர் விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ.187 கோடி மிச்சமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் டெண்டரில் அதிகமான விநியோகஸ்தர்கள் பங்கேற்றதால் இந்த விலை மாற்றம் நடைபெற்றிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் உலகச் சந்தைகளில் நிலவும் அதிக பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களின் மொத்த விலைக் குறியீட்டின் உயர்வைக் கருத்தில் கொண்டு வழக்கமாக ஒவ்வொரு கொள்முதலின்போதும் விலை உயர்வு தான் இருக்கும். மாறாக 29 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks