முதல்வர் விஜய்க்கு வீடியோ வெளியிட்டு விட்டு ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் இப்ராஹிம் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீட்டர் கட்டணத்தை உயர்த்தி தரவேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுநரின் உடலை கைப்பற்றி வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் இப்ராஹிம். இவர், வியாசர்பாடி எம்கேபி நகர், சர்மா நகர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆட்டோ சவாரி ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை திடீரென இப்ராஹிம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “தமிழக முதல்வர் மீட்டர் கட்டணத்தை உயர்த்தி தரவேண்டும். என்னை போன்ற ஏழை ஆட்டோ ஓட்டுநர்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். பைக் டேக்ஸி போன்ற ஆப்களால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆகவே மீட்டர் கட்டணத்தை உயர்த்தி தரவேண்டும். இதை தமிழகம் முதல்வர் ஜோசப் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும் என வீடியோ வெளியிட்டு விட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

இதனைத்தொடர்ந்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் இப்ராஹிம் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

Source: Read Full Article