ரயில் பயணத்தில் முதியவர்களுக்கு குட் நியூஸ்! லோவர் பெர்த் ஒதுக்கீடு பற்றி தெரியுமா?

ரயில் பயணத்தில் முதியவர்களுக்கு குட் நியூஸ்! லோவர் பெர்த் ஒதுக்கீடு பற்றி தெரியுமா?
News Image

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். குறிப்பாக பண்டிகை காலங்களில் ரயில் பயணிகளுக்கு ஏற்றார்போல் அவ்வப்போது ரயில் நேரங்கள் மாற்றம் உட்பட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது ரயில்வே நிர்வாகம். ரயில்வே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுடைய பெண்கள் சிரமமின்றி பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக லோவர் பர்த் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கி வருகிறது.

நீண்ட தூரம் ரயிலில் பயணிக்கும் முதியவர்களுக்கு அப்பர் பர்த் மற்றும் மிடில் பர்த் போன்றவற்றில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே இவர்களுக்கு லோவர் பர்த் கோட்டாவை வழங்குகிறது. ஆண்களாக இருந்தால் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பெண்களாக இருந்தால் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. எல்லா நேரங்களிலும் முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ரயில் பெட்டிகளில் உள்ள காலியிடங்கள், நீங்கள் முன்பதிவு செய்யும் நேரம் மற்றும் கிளாஸ் ஆகியவற்றை பொருத்தும் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஸ்லீப்பர் கிளாஸில் ஒரு பெட்டிக்கு 6 முதல் 7 லோவர் பர்த் முதியவர்களுக்காக ஒதுக்கப்படுகிறது. 2AC கிளாஸில் 3 முதல் 4 லோவர் பர்த்தும், 3AC கிளாஸில் 4 முதல் 5 லோவர் பர்த்தும் ஒதுக்கப்படுகிறது. முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்காக இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் யாருக்காக முன்பதிவு செய்தாலும் சரி அவர்களுடைய வயது விவரங்களை சரியாக வழங்க வேண்டும். சீட்டை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே தவறான விவரங்களை வழங்கினால் பிரச்சனை ஏற்படலாம். ரயிலில் எத்தனை பெட்டிகள் இருக்கிறது என்பதைப் பொறுத்து முதியவர்களுக்காக ஒதுக்கப்படும் இந்த கோட்டாவில் சில மாற்றங்கள் இருக்கலாம்.

நீங்கள் முன்பதிவு செய்தும் உங்களுக்கு அப்பர் பர்த் அல்லது மிடில் பர்த் கிடைத்திருந்தால் நீங்கள் டிக்கெட் செக்கரிடம் பேசிப் பார்க்கலாம். பயணத்தின் போது காலியாக இருக்கும் லோவர் பர்த்தை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒதுக்க விதிமுறை இருக்கிறது. எனவே டிக்கெட் செக்கரை அணுகி உங்கள் சூழ்நிலையை அவரிடம் எடுத்துக் கூறலாம். ஆனால் ரயிலில் காலியிடம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். கட்டாயம் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks