நவம்பர் 1 முதல் சென்னை மின்சார ரயில் அட்டவணையில் மாற்றம்! புதிய ரயில் சேவைகள் அறிவிப்பு!

நவம்பர் 1 முதல் சென்னை மின்சார ரயில் அட்டவணையில் மாற்றம்! புதிய ரயில் சேவைகள் அறிவிப்பு!
News Image

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைக்கான புதிய அட்டவணை, நவ.01- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெற்கு ரயில்வே சென்னை  நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவள்ளுரில் இருந்து மூர் மார்க்கெட் வளாகத்துக்கு புதிய மின்சார ரயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, பயணிகளின் வசதியையும் ரயில் இயக்கத் திறனையும் மேம்படுத்தும் நோக்கிலும் சென்னை புறநகர் ரயில்களின் கால அட்டவணை திருத்தப்பட்டுள்ளது.

இது  நாளை  நவம்பர் 01- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். ரயில் சேவைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் கவனித்து அதற்கேற்ப பயணிகள் தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் நண்பகல் 12.25 மணிக்கு திருவள்ளூரில் இருந்து புறப்படும் மின்சார ரயில் (43230) மதியம் 01.45 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகத்தைச் சென்றடையும். மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து புறப்படும், மூர் மார்க்கெட் வளாகம்- பட்டாபிராம் மின்சார ரயில் சேவை திருவள்ளூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 07.10 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து புறப்பட்டு காலை 08.30 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயிலின் எண் 43871 ஆக இருந்த நிலையில், 43209 ஆக மாற்றப்பட்டுள்ளது.

பட்டாபிராம்- மூர் மார்க்கெட் வளாகம் மின்சார ரயில், இனி திருவள்ளூரில் இருந்து புறப்படும். அதாவது, நாள்தோறும் காலை 08.45 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மின்சார ரயில், காலை 10.20 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகத்தைச் சென்றடையும். இந்த ரயிலின் எண் 43872 ஆக இருந்த நிலையில், 43220 ஆக மாற்றப்பட்டுள்ளது. மூர் மார்க்கெட் வளாகம்- திருவள்ளூர் மின்சார ரயில், கடம்பத்தூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் மதியம் 02.00 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து புறப்படும் மின்சார ரயில், பிற்பகல் 03.25 மணிக்கு கடம்பத்தூர் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயிலின் எண் 43227 ஆக இருந்த நிலையில், 43903 ஆக மாற்றப்பட்டுள்ளது.

திருவள்ளூர்- மூர் மார்க்கெட் வளாகம் மின்சார ரயில், இனி கடம்பத்தூரில் இருந்து புறப்படும். நாள்தோறும் பிற்பகல் 03.35 மணிக்கு கடம்பத்தூரில் இருந்து புறப்படும் மின்சார ரயில், மாலை 05.05 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயிலின் எண் 43234 ஆக இருந்த நிலையில், 43904 ஆக மாற்றப்பட்டுள்ளது.

இரவு 07.30 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து புறப்படும் மூர் மார்க்கெட் வளாகம்- அரக்கோணம் விரைவு மின்சார ரயில் (43433) அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்றுச் செல்லும். இரவு 07.45 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மூர் மார்க்கெட் வளாகம்- அரக்கோணம் ரயில் (43435), மின்சார ரயிலாக மாற்றப்படுகிறது.

மூர் மார்க்கெட் வளாகம்- கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் சேவை, சூலூர்பேட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 05.20 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து புறப்படும் காலை 07.55 மணிக்கு சூலூர்பேட்டை ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயிலின் எண் 42001 ஆக இருந்த நிலையில் 42405 ஆக மாற்றப்பட்டுள்ளது.கும்மிடிப்பூண்டி- மூர் மார்க்கெட் வளாகம் மின்சார ரயில், சூலூர்பேட்டையில் இருந்து புறப்படும். நாள்தோறும் காலை 08.10 மணிக்கு சூலூர்பேட்டையில் இருந்து புறப்படும் மின்சார ரயில், காலை 10.40 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயிலின் எண் 42014 ஆக இருந்த நிலையில் 42408 ஆக மாற்றப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை- வேளச்சேரி- பரங்கிமலை இடையிலான தற்போதைய எம்ஆர்டிஎஸ் (MRTS) ரயில்களின் நேரங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks