ராகுல் காந்தியை தவிர்த்து நாட்டில் எந்த தலைவரும் மாணவர்களின் பிரச்சினைகளை செவி கொடுத்து கேட்பதில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி சென்னையில் வரும் 10ஆம் தேதி மாணவர்களின் குரல் என்ற நிகழ்வில் தமிழ்நாட்டின் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ள நிலையில் திருவள்ளூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ராகுல் காந்தியின் மாணவர்கள் குரல் நிகழ்ச்சி நாட்டின் பல நகரங்களில் நடந்து முடிந்து தற்போது தென்னிந்தியாவில் சென்னையில் நடைபெற உள்ளதாக கூறினார். பொதுக்கூட்டங்களைப் போல இல்லாமல் மாணவர்கள் தங்களின் பிரச்சனைகள் மற்றும் அவர்களை பாதிக்கும் விவகாரங்களை பேசுவதற்காக ராகுல் காந்தி ஏற்படுத்திய தளம் என்றார். நாட்டில் எந்த தலைவரும் மாணவர்கள் பிரச்சினையை கேட்காத நிலையில், ராகுல் காந்தி நாடு முழுவதும் பயணித்து மாணவர்களின் கருத்துக்களைக் கேட்டு, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் பிற விவகாரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்தது குறித்து அறிவதாக கூறினார்.
மாணவர்களின் போட்டி தேர்வு பயிற்சிகளுக்காக பெருந்தொகையை செலவழிப்பது பிரச்சினையாக உள்ளதாக கூறினார்.

நரேந்திர மோடி அரசில் வினாத்தாள்கள் தொடர்ந்து கசிந்து மாணவர்கள் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். ராகுல்காந்தியின் மாணவர்கள் குரல் நிகழ்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்று தங்களது பிரச்சினைகளை ராகுல் காந்தியிடம் முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார். காந்தி குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு எனவும், தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ராகுல் காந்தி மீது அன்பு செலுத்தி வருவதாகவும், பாரத ரத்னா ராஜீவ் காந்தி தேசத்தின் சேவையில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த ஸ்ரீபெரும்புதூர் இங்கிருந்து வெகு தொலைவில் இல்லை என்றார். நாட்டின் எதிர்காலத்திற்காக இளைஞர்களுக்கு அதிகாரமளிக்க ராகுல் காந்தி விரும்புவதாக கூறினார். தற்போதைய அரசு இளைஞர்களை நடத்தும் விதத்தையும் பார்க்கும்போது அது சரியல்ல என்பதை உணர்கிறோம்.

சமீபத்தில் நீட் ஊழல் மற்றும் கல்வி அமைச்சருக்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது, டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய இளைஞர்கள் மீது காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளை யாரும் மறக்கவில்லை எனவும், இந்திய இளைஞர்கள் எங்களுடன் கலந்துரையாடவும், தங்களது பிரச்சனைகளை எடுத்துரைக்கவும் இந்தத் தளத்தை வழங்கி வருவதாக கூறினார். தேர்தல் ஆணையத்தின் பணி, ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையைப் பாதுகாப்பதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குவது என்றும், ஆனால், இன்று தேர்தல் ஆணையம் செயல்படும் விதம், வாக்குகளைப் பறித்து, அதை மீண்டும் கொண்டு வருவது குடிமக்களின் பிரச்சனையாக மாறியுள்ளது என்றார். தேர்தல் ஆணையம் இப்படி செயல்படக் கூடாது எனவும், கர்நாடகாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டியல்களை வழங்குகின்றனர் என்றார்.

ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தால் இந்த அமைப்பு திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது எனவும், கடந்த வாரம் ஊடகங்களில் வெளியான செய்தி, நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளது என்றார். பாஜக ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் உள்ள அனைத்து அரசுகளும் சட்டவிரோதமான முறையில், வாக்கு திருட்டு மூலம் பறிக்கப்பட்டுள்ளன என்றும்,
தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் முறையையும் நரேந்திர மோடி அரசு மாற்றியுள்ளது எனவும், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்தனர் எனவும் இப்போது மாற்றப்பட்டுள்ளது எனவும் பிரதமரும் கேபினட் அமைச்சரும் ஒரே குழுவில் இருந்து தன்னிச்சையாக ஒரே மாதிரியாக வாக்களித்து தான் தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதா? எனவும் வினவினார்.

பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு, ஒரே கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டு பலமுறை பதிலளித்துவிட்டோம் எனவும், இந்த மாநிலத்தில் கூட்டணியில் அரசாங்கத்தில் இணைந்து செயல்படுகிறோம் எனவும், ஊடகங்கள் மட்டுமே இந்த விஷயத்தைப் பற்றித் திரும்பத் திரும்ப பேசுவதில் அர்த்தமில்லை என்றார். தவெக மற்றும் காங்கிரஸ் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை எனவும், ஊடகங்களுக்கும் இது தெரியும் எனவும், புதிய பிரச்சனையை உருவாக்க முயல்கிறீர்கள், இங்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, கவலைப்பட வேண்டாம் என்றார்.

Source: Read Full Article