IND VS PAK : இறுதி யுத்தம்

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. பொதுவாகவே உலகக் கோப்பை லீக் ஆட்டங்களிலேயே இந்த இரு அணிகள் மோதும் போட்டி பெரிதளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், ஆசிய விளையாட்டு தொடரின் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்திற்காக இவ்விரு அணிகள் மோதியதால் ஆட்டம் களைக்கட்டியது.

இந்தியாவின் மாஸ்டர் பிளேன்

ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் காலை 10.30 மணியளவில் போட்டி தொடங்கிய நிலையில், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதான ஆடுகளம் சுழற்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டதால், முதலில் பேட்டிங் செய்து நல்ல ரன்களை குவித்து பின்னர், சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து பாகிஸ்தானை திக்குமுக்காட வைக்க இந்தியா திட்டமிட்டது.

அபிஷேக் சர்மா அபாரம்

இந்திய தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக களமிறங்கிய அபிஷேக் சர்மா வழக்கம் போல் தனது பாணியில் அதிரடி காட்டினார். தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட வெறும் 28 பந்துகளில் 61 ரன்களை குவித்து அராஃபத் மின்னாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதிப் போட்டியில் இமாலய இலக்கு

மற்றொரு அதிரடி தொடக்க ஆட்டக்காரரான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 ரன்களில் ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் (21) மற்றும் இஷான் கிஷன் (20) ரன்களில் விக்கெட்களை பறிகுடுத்தனர். இந்த நிலையில், திலக் வர்மா - ஷிவம் துபே ஜோடி நிலைத்து நின்று ஆடி இந்திய அணியை நல்ல இலக்கை நோக்கி முன்னேற செய்தது. ஷிவம் துபே 27 ரன்களில் ஆட்டமிழக்க, திலக் வர்மா அரை சதத்தை பூர்த்தி செய்து கடைசி வரை நிலைத்து நின்று ஆடினார். இதன்மூலம், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 211 ரன்களை குவித்தது.

திணறிய பாகிஸ்தான்

இறுதி போட்டியில் 212 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தை தர தவறினர். இருப்பினும், ஹசன் நவாஸ் - சைம் அயுப் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய ஹசன் நவாஸ் 96 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய பந்துவீச்சாளர்கள் கொடுத்த அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 192 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்தியா அபாரம்

இதன்மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்திய அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷிவம் துபே ஆகியோ தலா 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா கைப்பற்றிய தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது.

Source: Read Full Article