
<p>சிஜேபி இணை ஒருங்கிணைப்பாளாரும், செய்தித்தொடர்பாளருமான சௌரவ் தாஸின் குடியுரிமை,பின்னணி விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதித்துறை மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக சௌரவ் தாஸ் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததாக கூறி, கணேஷ் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். </p>
<h2><strong>சௌரவ் தாஸ் இந்தியர்தானா ? என உறுதிசெய்ய ஆணை</strong></h2>
<p>மேலும், இம்மனுவில் சௌரவ் தாஸ் இந்தியர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் அவரது ஆதார் மற்றும் பாஸ்போர்ட் ஆகிய ஆவணங்களை ரத்து செய்ய வேண்டுமெனவும், சமூக வலைதளக்கணக்குகளை முடக்கவும் கோரப்பட்டிருந்தது. மனுவை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், சௌரவ்தாசின் பின்னணி குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பாஸ்போர்ட் அதிகாரிகள், தனித்துவ அடையாள அதிகார அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டனர். </p>
Source: Read Full Article