கட்சி தலைவராக இருந்து தற்போது யூடியூபர் சீமானாக மாறிவிட்டார் – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம் !

கட்சி தலைவராக இருந்து தற்போது யூடியூபர் சீமானாக மாறிவிட்டார் – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம் !
News Image

ஒரு தெருவிலாவது GPay, PhonePe மூலம் பணம் கொடுத்ததற்கான ஆதாரத்தை காட்டுங்கள்” – பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சவால்.

நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பு

மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இடைத்தேர்தல் பணிகள் குறித்து அவர் கூறியதாவது..," இடைத்தேர்தல் பணிகள் அனைத்தும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. மாலை 7 முதல் 8 மணிக்குள் பணிகளை முடித்து வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். இது வெறும் இடைத்தேர்தல் அல்ல. ஒரு கட்சியின் தலைமை அந்த கட்சியின் நிறுவனர்களான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் அம்மாவுக்கு எதிராக செயல்படுவதால், இன்று பலரும் எடப்பாடி பழனிசாமியை நம்பவில்லை. அமைச்சர் செங்கோட்டையன் எங்களுடன் வந்து இணைந்திருக்கிறார். இந்த தேர்தலில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மக்கள் முழு ஆதரவுடன் வெற்றி வழங்குவார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. திமுகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும் இந்த தேர்தலில் மக்களுக்கு வெளிப்படையாக அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

உண்மை முகத்தை வெளிப்படுத்தி வருகிறார்

முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தி வருகிறார். உதயநிதியும் தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தி வருகிறார். பெண்கள் குறித்து அவர்கள் தங்களது மனதில் வைத்துள்ள எண்ணங்களை பொதுவெளியில் வெளிப்படுத்தி வருகின்றனர். திமுக போன்ற கட்சியில் பெண்கள் எப்படி பயணிக்கிறார்கள், அந்த கட்சியில் இருக்கும் பெண்களின் குடும்பத்தினர் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. திமுகவினர் எதை வைத்து மக்களிடம் ஓட்டு கேட்பார்கள்? ஸ்டாலினை காட்டி ஓட்டு கேட்பார்களா, உதயநிதியை காட்டி ஓட்டு கேட்பார்களா? அவர்கள் மக்களுக்கு செய்த நல்ல பணிகள் என்ன என்பதை சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை. அதனால் விரக்தியின் உச்சத்தில் மனதில் இருப்பதை எல்லாம் பொதுவெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பெண்களை ஒரு பொருளாக பார்க்கும் பழக்கம் திமுகவுக்கு இருப்பதாக அமைச்சர் விமர்சித்தார். அதனால்தான் பெண்கள் அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும், அ.தி.மு.க.வுக்கு பெண்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கிறது.

தலைவரை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தோம்.

ஒரு பெண் வேட்பாளர் குறித்து கொச்சையாக பேசும் அளவுக்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தேர்தலில் ஓட்டு கேட்கும்போது தங்கள் கட்சி என்ன செய்தது என்பதை சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக என்ன செய்தது என்பதை சொல்ல முடியவில்லை. ஆனால் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு நான்கு மாதங்களில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இத்தனை திட்டங்களை நான்கு மாதங்களில் நிறைவேற்றிய நிலையில், இன்னும் நான்கரை ஆண்டுகள் ஆட்சி உள்ளது. தமிழகத்தில் நல்லாட்சி ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல, பத்து, இருபது, முப்பது ஆண்டுகளுக்கும் தொடரும் வகையில் மக்கள் ஆதரவு இருக்கும். இரண்டு தொகுதிகளிலும் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக சிலர் குற்றச்சாட்டு கூறுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சண்முகம் அவர்களிடம் இதை தெளிவாகக் கேட்டுக்கொள்கிறேன். திமுக சொல்கின்ற ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டு பேச வேண்டாம். எங்காவது பணம் கொடுத்ததாக ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். ஒரு தெருவிலாவது பணம் கொடுத்திருந்தால் காட்டுங்கள். GPay, PhonePe மூலம் பணம் கொடுத்ததாக இருந்தாலும் அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள். 40 ஆண்டுகால அரசியலில் இதுபோன்ற பணம் கொடுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டதில்லை. தற்போது கூட அத்தகைய எந்த முயற்சியும் எங்களிடம் இல்லை. எங்களுடைய தலைவர் கடந்த நான்கு மாதங்களில் செய்த நல்ல பணிகளே எங்களுக்கு 100 சதவீத வாக்குகளை பெற்றுத்தரும். சண்முகம் அவர்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள். ஜென்கிரணாட்சு உள்ளிட்ட விவகாரங்களில் திமுகவை நம்பி தவறான தகவல்களை பெற்று பேச வேண்டாம்.

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அனுமதிகள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார். சுமார் 30,000 அனுமதிகள் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவை ஒரே மாதிரியாக வழங்கப்படவில்லை. 400, 5,000 போன்ற எண்ணிக்கைகளில் பல்வேறு பிரிவுகளுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், இதில் எம்.எல்.ஏ.க்களோ, கட்சி நிர்வாகிகளோ தலையிடவில்லை. எம்.எல்.ஏ.க்களுக்கு அவர்களுக்குள் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான அனுமதிகள், 10, 14 போன்ற எண்ணிக்கையில் வழங்கப்பட்டிருக்கலாம். மற்ற அனுமதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டன. நன்கொடையாளர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்பட்டன. இதில் யாரும் தலையிடவில்லை. எப்போது வேண்டுமானாலும் கோயில் இணை ஆணையரிடம் சென்று யார் யாருக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பதை தனிப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் சரிபார்க்கலாம். இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குப் பிறகு, தனிப்பட்ட பதிவுகளை முறையாக பராமரிக்குமாறு நான் சொன்னேன். கோயிலில் யாருக்கும் சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. கடந்த வாரம்தான் தலைவருடன் கோயிலுக்குள் சென்று தானும் தரிசனம் செய்ய முடிந்தது. அதற்கு முன்பு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக தாங்கள் கோயிலுக்குள் செல்லவில்லை. முந்தைய காலங்களில் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதை மனதில் வைத்து இந்த ஆண்டு எந்தவித பாதிப்பும் இல்லாமல், பொதுமக்களுக்கு சிறு பாதிப்புகூட ஏற்படாமல் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். கோயில் நிர்வாகம் தொடர்பாக சிலர் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை. யாருக்கு என்ன வழங்கப்பட்டது என்பதை நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், சீமான் முன்பு ஒரு கட்சி தலைவராக இருந்து அரசியல் களத்தில் செயல்பட்ட நிலையில், தற்போது தினமும் ஒரு மேடைக்குச் சென்று ஒரு கருத்தை கூறி அதை யூடியூபில் பிரசாரம் செய்யும் அளவுக்கு மாறி விட்டார். ஒரு நாள் ஒன்றையும், மறுநாள் வேறொன்றையும் கூறும் நிலையில், அவர் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் அளித்துக்கொண்டிருக்க தங்களுக்கு நேரமில்லை. கட்சி தலைவராக இருந்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும், அதிகாரத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படாமல் தொடர்ந்து கருத்துகளை மட்டும் வெளியிடுபவர் யூடியூபராகத்தான் இருப்பார். அவருடைய கருத்துகளில் ஒவ்வொரு நாளும் முரண்பாடுகள் இருப்பதாகவும், அதனால் அவர் கட்சி தலைவராக இருந்து தற்போது யூடியூபராக மாறி விட்டார். இந்த இடைத்தேர்தல் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் மட்டுமல்ல. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் நிலைப்பாடு, மக்களுக்காக அவர்கள் செய்த பணிகள் என்ன என்பது குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் தேர்தலாகும். இந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் எவ்வாறு செயல்பட்டுள்ளன என்பதை மாநிலம் முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks