டெல்டா மக்களுக்கு குட் நியூஸ்! 4 வழிச்சாலை பணிகள் 88% நிறைவு... டிசம்பரில் ரெடி!

டெல்டா மக்களுக்கு குட் நியூஸ்! 4 வழிச்சாலை பணிகள் 88% நிறைவு... டிசம்பரில் ரெடி!
News Image

விழுப்புரம்: விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையிலான 4 வழிச்சாலை பணிகளில், சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் ‘0’ பாயிண்ட் வரையிலான 4-ம் கட்டப் பணிகள் 88 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு வாகனப் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என நகாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.6,431 கோடியில் 179.8 கி.மீ. 4 வழிச்சாலை

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை சுமார் 179.8 கி.மீ. தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ரூ.6,431 கோடி நிதி ஒதுக்கியது. இதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) 4 கட்டங்களாகப் பிரித்து மேற்கொண்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு பணிகள் தொடங்கின. இதில் விழுப்புரம் ஜானகிபுரம் முதல் சட்டநாதபுரம் வரையிலான சுமார் 123.8 கி.மீ. தூரத்துக்கான 3 கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, ஜானகிபுரம் முதல் சட்டநாதபுரம் அருகே தென்னலகுடி வரையிலான சாலை கடந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

55 கி.மீ. தூரத்திற்கு 4-ம் கட்டப் பணி

இதன் தொடர்ச்சியாக, சட்டநாதபுரம்-தென்னலகுடியில் இருந்து நாகப்பட்டினம் ‘0’ பாயிண்ட் வரை 55 கி.மீ. தூரத்திற்கு 4-ம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் திருக்கடையூர், காளியப்பநல்லூர், காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் 7 மேம்பாலங்கள், உப்பனாறு, நந்தலாறு, வெட்டாறு உள்ளிட்ட ஆறுகளை கடக்கும் வகையில் 6 பெரிய பாலங்கள், 5 அண்டர்பாஸ் பாலங்கள், 235 கல்வெர்ட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டது.

மேலும், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தலா ஒரு ரயில்வே மேம்பாலமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணியை குஜராத்தைச் சேர்ந்த வெல்ஸ்பன் என்டர்பிரைசஸ் நிறுவனம் சுமார் ரூ.1,900 கோடி மதிப்பீட்டில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியது.

88 சதவீத பணிகள் நிறைவு

பணிகள் தொடங்கி சுமார் 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், 4-ம் கட்டப் பணிகள் தற்போது 88 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பெரும்பாலான பாலப் பணிகள் முடிவடைந்துள்ளன. காரைக்கால் ரயில்வே மேம்பாலம் மற்றும் நாகப்பட்டினம் அருகே தெத்தி பகுதியில் அமைக்கப்படும் மேம்பாலம் ஆகியவற்றின் பணிகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாலங்கள் மற்றும் இணைப்பு சாலை பணிகள் முடிவடைந்த பகுதிகளில் ஏற்கனவே வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

காரைக்கால் ரயில்வே மேம்பாலப் பணி தீவிரம்

காரைக்கால் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தில் தற்போது பவுஸ்டிங் கர்டர் அமைக்கும் பணியும், இருபுறங்களிலும் இணைப்புச் சாலை அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலத்தின் பணிகள் சுமார் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அதேபோல், எதிர்காலத்தில் தரங்கம்பாடி பகுதியில் ரயில்வே தண்டவாளம் அமைக்கும் திட்டம் இருப்பதால், பொறையார் பகுதியில் ஆறு மற்றும் ரயில்வே பாதையை கடக்கும் வகையில் பவுஸ்டிங் கர்டர்கள் அமைக்கப்பட்டு, சுமார் 170 மீட்டர் நீளத்திற்கு ஒரே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

400 கி.மீ. தொலைவில் இருந்து கொண்டு வரப்படும் கருங்கல்

டெல்டா பகுதிகளில் சாலை மற்றும் பாலங்களின் இணைப்புப் பகுதிகளில் கரைகளை பலப்படுத்துவதற்கான தேவையான கருங்கல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 400 கி.மீ. தொலைவில் உள்ள கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கருங்கல் கொண்டு வரப்பட்டு, பாலங்களின் இணைப்புப் பகுதிகளில் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

மண் கிடைப்பதில் சிக்கல்

4-ம் கட்டப் பணிகள் தாமதமாவதற்கு டெல்டா பகுதிகளில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள் முக்கிய காரணமாக இருந்ததாக நகாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“டெல்டா பகுதிகளில் சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அதேபோல், சாலைப் பணிகளுக்கு தேவையான மணல், மண் மற்றும் கிராவல் மண் போன்றவை டெல்டா பகுதிகளில் போதுமான அளவில் கிடைக்கவில்லை. 10 இடங்களில் மண் பரிசோதனை செய்தால், 2 இடங்களில் மட்டுமே சாலைப் பணிக்கு தகுதியான மண் கிடைக்கிறது. இதனால் சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான சாலைப் பணிகளை விரைந்து மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது தஞ்சாவூர் மற்றும் கடலூர் பகுதிகளில் இருந்து தனியாரிடம் மண் வாங்கி வந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நெய்வேலி சுரங்கப் பகுதியில் இருந்தும் மண் எடுத்து பயன்படுத்தப்படுகிறது. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்து, சாலையை வாகனப் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

மதகடிப்பட்டில் நடை மேம்பாலம் தேவை

புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சாலையில் செல்லும் பஸ்கள் மேம்பாலப் பகுதியில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றன. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மதகடிப்பட்டில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உள்வாங்கிய மேம்பாலம் சீரமைப்பு பணி

சிதம்பரம்-கொள்ளிடம் ஆற்றுப்பாலம் அருகே உள்ள எறுக்கண்காட்டுப்படுகை கிராமத்தில், விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தின் ஒரு பகுதி சில வாரங்களுக்கு முன்பு உள்வாங்கியது. அந்தப் பகுதியில் பூமிக்கு அடியில் உள்ள மண் மென்மையாக இருந்ததால் பாலம் உள்வாங்கியதாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தின் இரு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள் அகற்றப்பட்டன. பின்னர் சுமார் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, தரமற்ற மண்ணை அகற்றினர்.

தற்போது நெய்வேலி பகுதியில் இருந்து தகுதியான மண் கொண்டு வரப்பட்டு, அந்த இடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சிதம்பரம்-சீர்காழி மார்க்கத்தில் உள்ள மேம்பாலப் பணி முடிவடைந்து, ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் நாகப்பட்டினம்-விழுப்புரம் மார்க்கத்தில் உள்ள மேம்பாலப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தெத்தி மேம்பாலப் பணியில் மண் உள்வாங்கியதால் மாற்றம்

நாகப்பட்டினம் அருகே தெத்தி பகுதியில் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஒரு புறத்தில் பாலப் பணிகள் முழுமையாக முடிந்திருந்த நிலையில், மறுபுறத்திற்கான பணிகள் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. சுமார் 50 சதவீதம் கட்டுமானப் பணி நடைபெற்றபோது, திடீரென பாலம் அமைக்கும் பகுதியில் மண் உள்வாங்கியது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகள் நிறுத்தப்பட்டன. ஏற்கனவே இருபுறங்களிலும் அமைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பகுதிகள் முழுமையாக அகற்றப்பட்டன. தற்போது அப்பகுதியில் இருந்த மண் அகற்றப்பட்டு, புதிய அடித்தளத்துடன் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சாலைகளை சீரமைத்து ‘ஸ்மூத்’ செய்யும் பணிகள்

விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் சில மேம்பாலப் பகுதிகளில் வாகனங்கள் செல்லும்போது சாலையில் ஏற்ற இறக்கம் காரணமாக ‘ஜர்க்’ ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகின்றனர். இதனை சரிசெய்ய கடலூர் மாவட்டத்தில் எம்.புதூர், எஸ்.புதூர், கரிக்கலாம்பாக்கம், உறுவையாறு, கடலூர் துறைமுகம், சிவராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பால இணைப்புச் சாலைகளை சீரமைத்து ‘ஸ்மூத்’ செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எம்.புதூர்-எஸ்.புதூர் இடையிலான மேம்பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டு, வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், ஜானகிபுரம் முதல் அரியூர் வரையிலான மேம்பாலங்களிலும் சாலையை சீரமைத்து, வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்டர் மீடியனில் செடிகள் இல்லாததால் சிக்கல்

விழுப்புரம் ஜானகிபுரம் முதல் கடலூர் சாவடி வரையிலான 4 வழிச்சாலையில், மேம்பாலங்களின் சென்டர் மீடியனில் எதிரெதிர் திசையில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளி நேரடியாக வாகன ஓட்டிகளின் கண்களில் படுவதைத் தடுக்கும் வகையில் பூச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆனால், சாவடி முதல் நாகப்பட்டினம் வரையிலான பகுதிகளில் சென்டர் மீடியனில் போதிய அளவில் மரங்கள் மற்றும் செடிகள் நடப்படவில்லை.

மேலும், சில இடங்களில் சென்டர் மீடியனில் அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்பின் உயரமும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் எதிர்திசையில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் நேரடியாக கண்களில் படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

இதனால், எதிரே வரும் வாகனம் மாற்றுப் பாதையில் செல்கிறதா அல்லது தங்களது சாலையின் எதிர்திசையில் வருகிறதா என்பதை புரிந்து கொள்வதில் சில நேரங்களில் குழப்பம் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு

விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து வசதி மேலும் மேம்படும். தற்போது 4-ம் கட்டப் பணிகள் 88 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பாலம், சாலை மற்றும் இணைப்புப் பணிகளை விரைந்து முடித்து, வரும் டிசம்பர் மாதத்தில் சாலையை முழுமையாக வாகனப் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க நகாய் திட்டமிட்டுள்ளது. இந்தச் சாலை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால், டெல்டா மாவட்டங்களின் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையிலான சாலை இணைப்பும் மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks