“குழந்தைகள் கடத்தலின் தலைநகரமாக மாறுகிறதா தமிழ்நாடு?” - திமுக எம்பி கனிமொழி அதிர்ச்சி குற்றச்சாட்டு

“குழந்தைகள் கடத்தலின் தலைநகரமாக மாறுகிறதா தமிழ்நாடு?” - திமுக எம்பி கனிமொழி அதிர்ச்சி குற்றச்சாட்டு
News Image

குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்படுவதன் தலைநகரமாகத் தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறது என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்து, திமுக மகளிர் அணியின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய கனிமொழி, “இதுதான்தமிழ்நாட்டில் இன்று சட்டம் ஒழுங்கு இருக்கக்கூடிய நிலை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. வீட்டில் இருக்கக்கூடிய பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, ஒரு பெண் வீட்டின் வாசலில் அமர்ந்திருக்கிறார். அந்தப் பெண்ணைக் கொலை செய்கிறார்கள்.  இத்தனை ஆண்டுகளாகப் பெண்கள் வெளியே வர வேண்டும், படிக்க வேண்டும், வேலைக்குப் போக வேண்டும், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம். “நீ நினைத்தபொழுது வெளியே வா” என்றுதான் விடியல் பயணத்தை நம்முடைய முதலமைச்சராக இருந்த அண்ணன் தளபதி அவர்கள் அறிவித்தார்கள். இன்று நீங்கள் பேருந்தில் இலவச பயணச்சீட்டு கொடுத்தால்கூட யோசிக்கிறார்கள் பெண்கள் வெளியே வருவதற்கு. ஒரு அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். “எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்தான் அம்மா, பெண் பிள்ளைகளெல்லாம் இல்லை. ஆனால் அந்தப் பசங்களை வெளியே அனுப்புவதற்கே பயமாக இருக்கிறது. நான் முன்னெல்லாம் கேட்க மாட்டேன், எங்கே போகிறாய், எங்கே வருகிறாய், எப்போது வருவாய் என்று. இப்போது அரை மணிநேரத்திற்கு ஒருமுறை நான் தொலைபேசியில் அழைத்து அந்தப் பிள்ளைகளைக் கேட்கிறேன், எங்கே இருக்கிறாய், இருக்கிறாயா, நன்றாக இருக்கிறாயா, வெளியே போகாதே என்றெல்லாம்”.

ஒவ்வொரு தாயும் தமிழ்நாட்டில் இப்படித்தான் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பயத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, இளைஞர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, யாருக்குமே பாதுகாப்பு இல்லை. என் தூத்துக்குடி தொகுதியில் இரண்டு பெண்களைக் கடத்திச் செல்வதற்காக வீட்டிற்குள் புகுந்து தாய், தந்தை, மகன் மூன்று பேரையும் தாக்கியதில் தாய் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இவர்களுடைய நிர்வாகத் திறமை, இவர்களுடைய அரசு என்ன லட்சணத்தில் இருக்கிறது என்றால், உயிரோடு கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்த தந்தை,மிக மோசமாகத் தாக்கப்பட்டிருந்த அவரைக்கூடப் பிழைக்க வைக்க முடியவில்லை. 10 வயது சிறுவனுக்கு இரண்டு விரல்களைக் காணவில்லை.

இன்று அந்த மூன்று குழந்தைகளும் அம்மா, அப்பா இரண்டு பேரும் இல்லாமல் அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். விஜய் மாமாவிற்கு வாக்களியுங்கள் என்று சொன்னாரல்லவா? அந்த விஜய் மாமா ஆட்சியில் எத்தனை குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்? எத்தனை குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டுக் வீடு திரும்பி வருவதில்லை? வீட்டில் இருந்த குழந்தைகளை, ஒரு வயதுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள். இவர்களுடைய கட்சியினரே தூக்கிக்கொண்டு போய் விற்கிறார்கள். நான் கேட்கிறேன், தேர்தல் நேரத்தில் சொன்னீர்களல்லவா “நண்பாஸ், நண்பீஸ், வீட்டில் போய் அடம் பிடித்து எனக்கு வாக்கு வாங்கித்தாருங்கள்” என்று? அப்பொழுது அந்தக் குழந்தைகளைப் பயன்படுத்தினீர்களா இல்லையா? இன்று அந்தக் குழந்தைகளுக்குக்கூடப் பாதுகாப்பு தர முடியாமல் துப்பற்ற ஒரு ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்.

இத்தனை குழந்தைகள் காணாமல் போவைதைப் பற்றி கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா? பத்திரிகைகளில் எழுதுகிறார்கள், “Tamil Nadu has become the hub of child trafficking” என்று. குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்படுவதன் தலைநகரமாகத் தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறது என்று பத்திரிகைகள் எழுதக்கூடிய அளவிற்கு இன்று தமிழ்நாடு அவ்வளவு மோசமாகிவிட்டது. வீட்டில் குழந்தையை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சி இன்று தமிழ்நாட்டிலே நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு விரைவில் நாம் ஒரு முடிவு கண்டாக வேண்டும், முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks