புதுக்கோட்டைக்கு வரும் முதல்வர் விஜய்: யார் யாரைச் சந்திக்கிறார்? எப்படி வருகிறார்? மாஸ் அப்டேட் கொடுத்த அமைச்சர் பர்வேஸ்

புதுக்கோட்டைக்கு வரும் முதல்வர் விஜய்: யார் யாரைச் சந்திக்கிறார்? எப்படி வருகிறார்? மாஸ் அப்டேட் கொடுத்த அமைச்சர் பர்வேஸ்
News Image

முதலமைச்சர் பொதுமக்களை சந்திக்கக் கூடாது. அவருக்கு ஆதரவு பெருகி விடக்கூடாது என்பதற்காக திமுகவினர் வன்மத்தையும் விமர்சனங்களையும் செய்து வருகின்றனர் என்று அமைச்சர் முகமது பர்வேஸ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டைக்கு வரும் முதல்வர் விஜய்

புதுக்கோட்டைக்கு வரும் 2ஆம் தேதி முதல்வர் வருவதை ஒட்டி ஆயுதப்படை மைதானத்தில் மேடை அமைக்கும் பணி மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் முகமது பர்வேஸ், ஆட்சியர் அருணா ஆகியோர் ஆய்வு செய்தனர். விழாவிற்கு வரும் பொது மக்களுக்கு கழிப்பறை வசதிகள், அடிப்படை வசதிகள் முறையாக செய்திருக்க வேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முகமது பர்வேஸ், புதுக்கோட்டைக்கும் வரும் முதல்வர் முதலில் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து, ஆயுத படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மாவட்டத்தில் மொத்தம் 14000 பேருக்கு 100 கோடி ரூபாய் மதிப்பு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விழா மேடையில் 2000 பேருக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

பேனர் வைக்கக்கூடாது

முதல்வர் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் யாரும் கொடி,  பேனர், பிளக்ஸ் ஆகியவை வைக்க, கட்டக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழா எளிமையாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து முதல்வர் காரில் வரும்போது, முதல்வரை பார்க்க பொதுமக்கள் ஆர்வத்தோடு இருப்பார்கள். ஆகையால் அவர்கள் முதலமைச்சரை பார்ப்பதற்கு ரோடு ஷோ இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. முதல்வரை பார்ப்பதற்காக பொதுமக்கள் அதிகம் பேர் வருவார்கள் என்பதற்காக சாலையின் இருபுறமும் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்துள்ளனர்.

வன்மத்தில் திமுக விமர்சனம்

புதிய திட்டங்களை இந்த அரசு கொண்டுவரவில்லை. ஏற்கனவே நாங்கள் கொண்டு வந்த திட்டங்களைதான் திறந்து வைக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் விமர்சனம் செய்வதற்கு குறித்து கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அவர்கள் பணத்தில் இருந்தா திட்டங்களை கொண்டு வந்தார்கள்,
அரசு பணத்தில்தான் பொதுமக்களுக்கு திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களை திமுக ஆட்சியில் அவர்கள் தொடங்கவில்லையா? விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக திமுகவினர் விமர்சனம் செய்கின்றனர்.

முதலமைச்சர் பொதுமக்களை சந்திப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஆகையால் வன்மத்திலும் பொறாமையிலும் திமுக தலைவர்கள் விமர்சனம் செய்கின்றனர். துடிப்பான முதலமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார். புதுக்கோட்டைக்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ அவையெல்லாம் அமைச்சரிடம் கேட்டு நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks