நடிகை ராதிகா வீட்டுப் பணிப்பெண் மகன் கொடூர கொலை: பீர் பாட்டிலால் கழுத்தறுத்து பீச்சில் புதைப்பு

நடிகை ராதிகா வீட்டுப் பணிப்பெண் மகன் கொடூர கொலை: பீர் பாட்டிலால் கழுத்தறுத்து பீச்சில் புதைப்பு
News Image

நடிகை ராதிகா வீட்டு பணிப்பெண்ணின் மகனை  சென்னை அருகே பழவேற்காடு கடற்கரையில் பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்து மணலில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் திருமணத்தை மீறிய உறவால் அடித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின்பேரில், வருவாய் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் உடல் தோண்டி எடுத்து கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராதிகா வீட்டு பணிப்பெண்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எழில் செல்வி என்பவரது மகன் பிரசாந்த் (19). எழில் செல்வி சென்னையில் உள்ள நடிகை ராதிகா சரத்குமார் வீட்டில் பணி பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரசாந்த் தமது மாமா ரமேஷ் என்பவருடன் வீடுகளுக்கு டைல்ஸ் போடும் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. கடந்த 27-ஆம் தேதி சென்னையில் உள்ள தமது தாயை பார்க்க செல்வதாக தாய்மாமனிடம் கூறிவிட்டு வந்த பிரசாந்த், மறுநாள் 28-ஆம் தேதி தமது நண்பருக்கு வீடியோ கால் செய்து தம்மை அடிப்பதாக கூறியதாக சொல்லப்படுகிறது. பின்னர் அவரது தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டதாக ரமேஷ் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் கடலூர் போலீசார், காணாமல் போனவர் பிரிவில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த பிரசாந்தின் நண்பன் வேதராசு என்பவரது மனைவியுடன் பிரசாந்துக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததும், தமது நண்பன் தினேஷ் என்பவருடன் சேர்ந்து பிரசாந்தை சென்னை அடுத்த பழவேற்காடு கடற்கரை பகுதியில் பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்து கொலை செய்து புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட சடலம்

இதனைத் தொடர்ந்து கடலூர் போலீசார் இருவரையும் கைது செய்து, சென்னை அழைத்து வந்து பழவேற்காடு அடுத்த சாட்டாங் குப்பம் கடற்கரை பகுதியில் சடலம் புதைத்த இடத்தை அடையாளம் காட்டியுள்ளனர். கடலூர் போலீசார்,  திருப்பாலைவனம் போலீசாரின் உதவியுடன் கடற்கரை மணலில் மேலோட்டமாக புதைக்கப்பட்ட சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை சம்பவம் அரங்கேறி உள்ள காவல் நிலைய எல்லையான திருப்பாலைவனம் போலீசார் கொலை வழக்கு பதிந்து கடலூர் போலீசார் கைது செய்து அழைத்து வந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ராதிகா வீட்டு பணிப்பெண்ணின் மகன் சென்னை அருகே அடித்து கொலை செய்து கடற்கரையில் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks