தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மீதான சட்டம் ஒழுங்கு மீது திமுக தொடர்ந்து விமர்சனம் முன்வைத்து வருகிறது. குறிப்பாக, செஞ்சியில் மாயமான சிறுமி இதுவரை கண்டுபிடிக்கப்படாத சம்பவம் மொத்த தமிழ்நாட்டிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆளுங்கட்சியான தவெக-வை தொடர்ந்து திமுக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில், அதிமுக - திமுக ஆட்சியில் குழந்தைகள் மாயமான விவகாரம் குறித்து தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளதாவது,

10 ஆண்டுகளில் மாயமான குழந்தைகள்:

2016 முதல் 2025 வரை காணாமல் போன குழந்தைகளின் விவரங்களைப் பாருங்கள்! 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பதிவான மொத்த வழக்குகள் 22,209. அதுவே 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் 37,705 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, 2025-ல் மட்டும் 8,439 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகியுள்ளன.
30.09.2026 நிலவரப்படி, இந்தப் பத்து ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளில் 742 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய உண்மை.

கொலைக் குற்றங்கள் சராசரி குறைவு:

ஆனால், தமிழக வெற்றிக் கழகம் அரசு ஆட்சிக்கு வந்த பின் கொலை வழக்குகளின் மாத சராசரி 131.9-லிருந்து 128.5 ஆகக் குறைந்துள்ளது. கொலை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட 3,070 பேரில் 2,935 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் தொடர்பான கொலைகளும் 12-லிருந்து 7 ஆகக் குறைந்துள்ளன.
இவைதான் தரவுகள் சொல்லும் உண்மை !

2016 முதல் 2025 வரை காணாமல் போன குழந்தைகளின் விவரங்களைப் பாருங்கள்! 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பதிவான மொத்த வழக்குகள் 22,209. அதுவே 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் 37,705 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 2025-ல் மட்டும் 8,439 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. 30.09.2026 நிலவரப்படி, இந்தப் பத்து ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளில் 742 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய உண்மை ! ஆனால், தமிழக வெற்றிக் கழகம் அரசு ஆட்சிக்கு வந்த பின் கொலை வழக்குகளின் மாத சராசரி 131.9-லிருந்து 128.5 ஆகக் குறைந்துள்ளது. கொலை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட 3,070 பேரில் 2,935 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் தொடர்பான கொலைகளும் 12-லிருந்து 7 ஆகக் குறைந்துள்ளன. இவைதான் தரவுகள் சொல்லும் உண்மை ! காவல்துறைக்கே முழுமையான தலைமைத்துவத்தை வழங்காமல், DGP-க்கூட உரிய முறையில் நியமிக்காமல் வைத்திருந்தது தான் திமுக ஆட்சியின் இலட்சணம். இப்படியிருக்க, சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசுவதற்கு திமுகவிற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது ? Dummy Daddy ஆட்சியில் இத்தனை பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு, இன்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறீர்கள் ?

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) October 27, 2026

என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

காவல்துறைக்கே முழுமையான தலைமைத்துவத்தை வழங்காமல், DGP-க்கூட உரிய முறையில் நியமிக்காமல் வைத்திருந்தது தான் திமுக ஆட்சியின் இலட்சணம். இப்படியிருக்க, சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசுவதற்கு திமுகவிற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது ?

Dummy Daddy ஆட்சியில் இத்தனை பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு, இன்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறீர்கள் ?

இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

Source: Read Full Article