கட்டிட விதிகளில் முக்கிய மாற்றங்கள்..EV சார்ஜிங் கட்டாயம்! தமிழக அரசு அதிரடி!

கட்டிட விதிகளில் முக்கிய மாற்றங்கள்..EV சார்ஜிங் கட்டாயம்! தமிழக அரசு அதிரடி!
News Image

தமிழகத்தில் கட்டிடங்களின் வளர்ச்சியை முறைப்படுத்தவும், தற்போதைய நவீன தேவைகளுக்கு ஏற்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் தமிழக அரசு முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதாவது உயரமான கட்டிடங்களுக்கான அதிகபட்ச உயர வரம்பை 18.30 மீட்டரில் இருந்து 19.50 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள கட்டிடங்களில் சார்ஜிங் வசதிக்கு ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வீட்டுவசதித் துறை

இதுகுறித்து வீட்டுவசதித் துறை செயலர் கிர்லோஷ்குமார் வெளியிட்ட அரசாணையில்: தமிழகத்தில் குடியிருப்பு மற்றும் குடியிருப்பு பயன்பாட்டுக்கான மண்டலப் பகுதியில் 12 மீட்டர் அகலமான சாலை இருந்தால் அதை ஒட்டிய மனைகள் வணிகப் பயன்பாட் டுக்கு உரியவையாகக் கருதப் படும். சென்னை னை பெருநகரப் பகுதிக்கு வெளியே 9 மீட்டர் சாலை போதுமானது. சாலை அகலம் தொடர்ச்சியாக 100 மீட்டர் நீளத்துக்கு இருக்க வேண்டும்.

மல்டி பிளக்ஸ் திரையரங்குகள்

கருத்தரங்க அரங்கம், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், குளிரூட்டப்பட்ட ஒரு திரை கொண்ட திரையரங்கங்கள் அமைக்க சாலை அகலம் 12 மீட்டராகவும், மாநகராட்சிகள், நகராட்சிப் பகுதிகளில் கண்காட்சி அரங்கங்கள், திருமண மண்டபங்கள் அமைக்க 15 மீட்டர் அகலமும், இதர பகுதிகளில் 12 மீட்டர் அகலமும் இருக்க வேண்டும். ஸ்டார் ஓட்டல்கள் மற்றும் பல திரை கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், மால்கள் அமைக்க 18 மீட்டர் அகலம் கொண்ட சாலையாக இருக்க வேண்டும். மேலும்,12,15, 18 மீட்டர் சாலைகளுக்கு 2.0, 2.5, 3.25 என தளப்பரப்பு குறியீடு (எஃப்எஸ்ஐ) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சார்ஜிங் வசதி

விடுதிகளில் ஒவ்வொரு கார் நிறுத்துமிடத்துக்கும் ஓட்டுநர்களுக்கு ஒரு படுக்கை வசதி வழங்க வேண்டும். ஐ.டி. அலுவலகங்களில் ஒவ்வொரு 75 சதுர மீட்டருக்கும் ஒரு கார் இடம் தேவை. 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள கட்டிடங்களில் மின்சார வாகனங்களுக்கான விரைவு சார்ஜிங் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் முடிக்கப்பட்ட பிறகே நிறைவுச் சான்றிதழ் வழங்கப்படும். நீச்சல் குள விதிகளும் திருத்தப்பட்டுள்ளன. இதுதவிர, கட்டிடங்களுக்கு பக்கவாட்டில் விடப்படும் செட்பேக் தொடர்பான விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks