புதுக்கோட்டை பகுதி காடுகளில் பேராபத்து! தண்ணீரின்றி தவிக்கும் வனவிலங்குகள்!

புதுக்கோட்டை பகுதி காடுகளில் பேராபத்து! தண்ணீரின்றி தவிக்கும் வனவிலங்குகள்!
News Image

புதுக்கோட்டை: காடுகளில் தண்ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் வனவிலங்குகள் தவித்து வருவதாகவும், வாழ்வதற்கு வழியின்றி கிராமங்களுக்குள் புகுந்து வருவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.  மான்கள் தென்னந்தோப்புகளிலும் தஞ்சமடைவதும், குரங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் முகாமிடுவதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காடுகளை விட்டு வெளியேறும் மான்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் கடந்த வாரம் ஒரே நேரத்தில் 8 மான்கள் கூட்டமாகத் தஞ்சமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு சென்று, மான்களை மெதுவாக விரட்டிச் சென்று அருகிலுள்ள ஆவணத்தான்கோட்டை காட்டுப் பகுதிக்குள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இது தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்ல. அரிமளம், அன்னவாசல், திருவரங்குளம், வம்பன் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளை விட்டு வெளியேறுவதாகக் கூறப்படுகிறது.

தாகத்தால் தவிப்பு... உயிருக்கு ஆபத்து

காடுகளில் போதிய தண்ணீர் கிடைக்காததால் தாகத்துடன் வெளியேறும் மான்கள் பல்வேறு ஆபத்துகளைச் சந்திக்கின்றன. கிராமங்களுக்குள் நுழையும் மான்களை தெருநாய்கள் துரத்துவதால், அவை உயிர் பிழைக்க அங்குமிங்கும் ஓடி அச்சத்தில் தவிக்கின்றன. அப்போது சாலைகளைக் கடக்கும்போது வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயமும் அதிகரிக்கிறது.

மேலும், புதர்கள் மற்றும் மறைவான இடங்களில் செல்லும்போது பாழடைந்த கிணறுகளில் தவறி விழும் சம்பவங்களும் வனவிலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இயற்கையான வாழிடத்தில் பாதுகாப்பாக வாழ வேண்டிய விலங்குகள், உணவு மற்றும் தண்ணீருக்காக மனிதர்கள் வசிக்கும் பகுதிகளைத் தேடி வருவது அவற்றின் வாழ்விடச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.

குரங்குகளும் குடியிருப்புகளில் முகாம்

மற்றொருபுறம், குரங்குகள் கூட்டம் கூட்டமாகக் குடியிருப்புப் பகுதிகளில் தங்கத் தொடங்கியுள்ளன. மனிதர்கள் வழங்கும் உணவுகளைச் சாப்பிட்டுப் பழகியதால், காடுகளுக்குத் திரும்பாமல் உணவு கிடைக்கும் இடங்களிலேயே அவை தங்கிவிடுவதாக வனத்துறை தெரிவிக்கிறது.

யூகலிப்டஸ் மரங்களால் பாதிப்பா?

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாவட்டத்தின் பெரும்பாலான வனப்பகுதிகள் வனத்துறையைக் காட்டிலும் வனத்தோட்டக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. காடுகளில் வனவிலங்குகளுக்கு உணவளிக்கக்கூடிய பழ மரங்கள் அழிக்கப்பட்டு, வணிகப் பயன்பாட்டுக்கான யூகலிப்டஸ் மரங்கள் அதிக அளவில் நடப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினர். மேலும், நீர்வரத்துப் பாதைகள் அடைபட்டுள்ளதால் வனவிலங்குகள் தண்ணீரின்றித் தவிப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலை தொடர்ந்தால், வனவிலங்குகளுக்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் இயற்கையான வாழ்விடம் குறைந்து, காடுகள் அவற்றின் வாழ்வுக்கு ஏற்ற சூழலை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.

வனத்துறை விளக்கம் என்ன?

இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் கூறுகையில், மாவட்டத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் 7,332 ஏக்கரும், வனத்தோட்டக் கழகத்தின் கட்டுப்பாட்டில் 46,890 ஏக்கரும் உள்ளன. வனவிலங்குகளுக்காகக் காடுகளுக்குள் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதுடன், தண்ணீர்த் தொட்டிகள் அமைத்து லாரிகள் மூலமாகவும் தண்ணீர் நிரப்பப்படுகிறது. மான்களுக்கு வனப்பகுதிகளில் எந்தப் பாதிப்பும் இல்லை.

குரங்குகள் மனிதர்கள் கொடுக்கும் உணவைச் சாப்பிட்டுப் பழகிவிட்டதால் காடுகளுக்குத் திரும்பாமல் இருப்பதாகவும், அவற்றை அடர் வனப்பகுதிகளில் விடுவதற்கு அரசு அனுமதி அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வனவிலங்குகளின் வாழ்விடப் பாதுகாப்பு, இயற்கையான நீராதாரங்களைப் பராமரித்தல், உணவு கிடைக்கும் சூழலை மீட்டெடுத்தல் ஆகியவை முக்கியத்துவம் பெற வேண்டிய நிலையில், புதுக்கோட்டை காடுகளில் வனவிலங்குகளின் உண்மையான நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks