TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்

TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
News Image

TN Govt Free Cylinder: தமிழ்நாடு அரசின் ஆண்டுக்கு மூன்று விலையில்லா சிலிண்டர் யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் வழங்கப்படும் என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் விலையில்லா சிலிண்டர் திட்டம்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பிறகு தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 200 யூனிட் விலையில்லா மின்சாரம், குழந்தைகளுகு தாய் மாமன் தங்க மோதிரம், பெண்களுக்கு விரிவான இலவச போக்குவரத்து சேவை, மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் விரிவாக்கம் போன்ற எண்ணற்ற திட்ட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு மூன்று விலையில்லா சிலிண்டர் வழங்கும் திட்டத்திற்கான பயனர்களின் பட்டியலை தயார் செய்யும் பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைபவர்கள் யார்? எந்தெந்த நாட்களில் விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை

விலையில்லா சிலிண்டர் திட்டம் எப்போது தொடங்கும்?

ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என தவெக அறிவித்த நிலையில், வரும் 2027ம் ஆண்டு பொங்கல் தினத்தை ஒட்டி முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். ஆண்டுக்கு, 2.50 லட்சத்துக்குள் வருவாய் கொண்ட குடும்பத்தினர், சிறு, குறு விவசாயிகள், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் இத்திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர். 1.30 கோடி குடும்பங்கள் பயன் பெற உள்ளதாக கூறப்படும் இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்க உள்ளது.  இதற்கான தொகை பயனர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாராகும் பயனர்கள் பட்டியல்:

இதனிடையே இந்த திட்டத்தின் கீழ் பயனடைய உள்ள பயனர்களின் பட்டியலை தயார் செய்யும் பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளதாம். ஆதார் எண் அடிப்படையில் தமிழ்நாட்டில் 2.08 கோடி குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் எத்தனை குடும்பத்தினர், இரண்டு சிலிண்டர், ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். பிரதமரின் 'உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள பயனாளிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு வருகின்றனவாம். அதன் அடிப்படையில், அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு ஏற்ப, இலவச சிலிண்டர் திட்டத்திற்கு, பயனர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனராம்.

எந்தெந்த நாட்களில் விலையில்லா சிலிண்டர்?

இலவச சிலிண்டர் திட்டத்திற்கும் ரேஷன் கார்டுதாரர்களிடம் விண்ணப்பம் வழங்கப்பட்டு, தகவல் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் அனைத்தும், 'இ கவர்னன்ஸ்' எனப்படும் மின் ஆளுமை முகமை வாயிலாக சரிபார்க்கப்படும். பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி என, ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் வழங்கவும், அந்த தொகையை பண்டிகைக்கு முந்தைய நாட்களில் பயனர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks