அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த திமுக எம்பி ஆ.ராசாவுக்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு வன்மம், வெறுப்பு மற்றும் ஆற்றாமை

இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடமை,கண்ணியம், கட்டுப்பாடு முழக்கத்தை முன் வைத்த திமுக இப்போது வன்மம், வெறுப்பு மற்றும் ஆற்றாமையால் நிரம்பிக்கொண்டு இருக்கிறதோ என அய்யம் எழுகிறது. திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மட்டுமல்ல; முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் பணி ஆற்றியவர் ஆ.ராசா.

அதேபோல் இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ஆகிய இருவரின் இந்த உரையை கேட்டால் அந்த ஆற்றாமை புரியும். எனக்கு சந்தேகம் இருக்கு நீ யாருக்கு பிறந்த?” என கேட்பது பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா? அதனால் தான் நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆ.ராசா அவர்கள் அந்த கேள்வி எழுப்பும் போது எந்தவித அசைவும் இல்லாமல் தலை கவிழ்ந்தவாறு இருப்பார்.

முதல்வரை ஓடுகாலி என சேகர்பாபு அவர்கள் உளறியதை ‘பீப்’போட்டு அவமானத்தை மறைக்கிறது திமுக சார்ந்த ஊடகம். திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி குறித்த பாஜகவை சார்ந்த எச்.ராஜாவும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமானும் மிக இழிவாக பேசிய போது, கண்டித்த விடுதலைச்சிறுத்தைகள் இப்போது,திமுக பேச்சாளர்களின் இந்த இழிவான உரையை கண்டிக்கிறது. ஆ. ராசா - எச்.ராஜா
என்ன வித்தியாசம் இருக்கிறது?” என சரமாரியாக சாடியுள்ளார்.

நடந்தது என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மிசா காலம் குறித்து பேசும்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பற்றிய கருத்தின்போது அவர் காட்டிய உடல்மொழி கடும் சர்ச்சையைக் கிளப்பியது. தனது செயல் தற்செயலானது என விஜய் விளக்கம் கொடுத்தாலும் அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் முதலமைச்சர் விஜயின் ஆணவப்பேச்சைக் கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பி ஆ.ராசா கலந்துக் கொண்டு முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடினார். தொடர்ந்து அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரைப் பற்றி பேசும்போது, அவன் மந்திரியா.. என்ன இழவு என தெரியவில்லை. குரங்கு மரத்துக்கு மரம் தாவுவது போல பல கட்சிகள் மாறியவர். எனக்கு அவர் யாருக்கு பிறந்தவர் என்று சந்தேகம் உள்ளது. இந்த தருதலை கூட்டத்துக்கு ஒரு முதலமைச்சர். கை, கால்களை ஆட்டுவதற்கா ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாய் என பேசியிருந்தார். இது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. ஏற்கனவே ஆ.ராசா அதிமுக எடப்பாடி பழனிசாமியின் பிறப்பு குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article