முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம்

தமிழக முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகள் ஈர்க்கும் வகையில் லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட மாடல் ஆட்சியில் UK மற்றும் ஐரோப்பா நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டை படிப்படியாக தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான அடித்தளப் பணிகளை கடந்த ஆட்சியில் ஏற்கனவே செய்து வைத்துள்ளார் அன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.

திமுக ஆட்சியில் லண்டன் முதலீடுகள்

Wind Energy: தமிழ்நாட்டின் காற்றாலை இயந்திர உற்பத்தியில் நமக்கு இருக்கும் பலத்தைப் பயன்படுத்தி புதிய முதலீடு குறித்து சில நிறுவனங்களுடன் திராவிட மாடல் அரசு பேசி முதலீடுகளை உத்தேசமாக உறுதிசெய்து வைத்துள்ளது. Target ~10,000 Cr

Horse Powertrain நிறுவனம்: Renault-Geely நிறுவனங்களின் வழியே உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் நமது சென்னையில் Renault தொழிற்சாலையில் முதலீடு செய்ய 2025 முதலே பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். ஒன்றிய அரசின் ஒரு அனுமதிக்காக காத்திருந்த அவர்களுக்கு கடந்த june மாதம் அது கிடைத்துவிட்டது என்று"Hybrid powertrains could be manufactured at Renault’s Chennai facility" என்று Autocar பத்திரிகை செய்திகள் கூறின. மேலும் இந்த sector-க்கு 2028-ல் இருக்குமதி வரிச்சவால் நெருங்குகிறது. எனவே ஒப்பந்தத்தை உடனே முடிக்க அவர்கள் தயாராக இருப்பார்கள்.
Target ~₹4000 Cr.

Motherson & Wilson Power: ஏற்கனவே இவர்கள் சிறப்பான TN முதலீட்டாளர்கள். இதில் Motherson ஐரோப்பாவில் சில புதிய முயற்சிகள் எடுத்துவருகிறது. அடுத்தகட்ட விரிவாக்கம். ~₹15,000 Cr.

Hinduja: DMK ஆட்சியில் உறுதிசெய்யப்பட்ட Battery/BESS முதலீட்டின் மூலம் தொழிற்சாலை கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

இவற்றை தாண்டி A&D மற்றும் GCC நிறுவனங்கள் சில தமிழ்நாட்டில் உள்ள அவர்களின் முதலீடுகளை விரிவாக்கம் செய்ய தயாராக உள்ளனர்.
இவற்றையெல்லாம் ‘நாங்கள் கொண்டு வந்த *புதிய* முதலீடு’ என ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளாமல் புதிய நிறுவனங்களுடன் பேசுவாரா முதலமைச்சர்? புதிய ஒப்பந்தங்களைக் கொண்டு வரப் போகிறாரா என்று காத்திருக்கிறோம்!

Rolls-Royce, BAE Systems: Aerospace, Defence, MRO, R&Dல் மிகப்பெரிய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன! திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் போடப்பட்ட அடித்தளம் இன்னும் சிறப்பாக இருக்கிறது என அந்த பதிவில் டிஆர்பி ராஜா குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article