பத்திர பதிவிற்கு முன்பாக எந்த எந்த கட்டிடங்களுக்கு நேரில் ஆய்வு.! வெளியான புதிய வழிமுறை இதோ..

பத்திர பதிவிற்கு முன்பாக எந்த எந்த கட்டிடங்களுக்கு நேரில் ஆய்வு.! வெளியான புதிய வழிமுறை இதோ..
News Image

பத்திர பதிவு- கட்டிடங்கள் நேரில் ஆய்வு

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாகும். அந்த வகையில் பத்திர பதிவு செய்யும் போது 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வீடு பத்திர பதிவிற்கு வந்தால் அந்த இடத்தை சார் பதிவாளர் நேரில் சென்று ஆய்வு நடத்திய பிறகே பத்திர பதிவு செய்யப்பட்டு வந்தது. இதனால்  ஆவணங்களை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பத்திர பதிவு செய்ய புதிய வழிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

களப்பணி மேற்கொள்ளத்தேவையில்லாத கட்டடங்கள்

கட்டடத்தின் built up area 2500 சதுரடிக்கும் குறைவாகவும் கட்டட மதிப்பு 1 கோடிக்கு குறைவாகவும் இருப்பின் சுய சான்றளிக்கப்பட்ட (Self certified) கட்டட மதிப்பு அல்லது பொதுப்பணித்துறை தளவிலை விபரப்பட்டியலின் அடிப்படையில் கணக்கிடப்படும் சதுரடி மதிப்பு (கட்டட வகைப்பாட்டின் பட்டியல் இணைப்பு -II(A) முதல் I(E) வரை இணைக்கப்பட்டுள்ளது) அதில் எது அதிகமோ அதற்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்துவதாக ஆவணதாரரின் உறுதிமொழி சேர்க்கப்பட வேண்டும். அவ்வாறு ஆவணதாரரால் உறுதிமொழி அளிக்கப்படும் நிலையில், உயர் மதிப்பிற்கான முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் வசூலித்து களப்பணி மேற்கொள்ளாமல் ஆவணத்தை திரும்ப வழங்கலாம்.

கட்டடத்தின் built up area 2500 சதுரடிக்கும் அதிகமாகவும், கட்டட மதிப்பு 1 கோடிக்கும் குறைவாக இருப்பின் சுய சான்றளிக்கப்பட்ட கட்டட மதிப்பு அல்லது பொதுப்பணித்துறை தளவிலை விபரப்பட்டியலின் அடிப்படையில் கணக்கிடப்படும் சதுரடி மதிப்பு (கட்டட வகைப்பாட்டின் பட்டியல் இணைப்பு I(A) முதல் II(E) வரை இணைக்கப்பட்டுள்ளது) அதில் எது அதிகமோ அதற்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்துவதாக ஆவணதாரரின் உறுதிமொழி சேர்க்கப்பட வேண்டும். அவ்வாறு ஆவணதாரரால் உறுதிமொழி அளிக்கப்படும் நிலையில், உயர் மதிப்பிற்கான முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் வசூலித்து களப்பணி மேற்கொள்ளாமல் ஆவணத்தை திரும்ப வழங்கலாம்.

கட்டட மதிப்பு 1 கோடிக்கும் மேல் 5 கோடிக்கும் கீழ் இருப்பின். அங்கீகரிக்கப்பட்ட கட்ட மதிப்பாளரால் (Certified Chartered Engineer) கட்டடம் மதிப்பிடப்பட்டு, அவ்வறிக்கை இணைக்கப்பட வேண்டும். ஆவணத்துடன் இணைக்கப்படும் படிவம் 1-Aல் அங்கீகரிக்கப்பட்ட கட்ட மதிப்பாளரால் (Certified Chartered Engineer) ன் மதிப்பு அல்லது பொதுப்பணித்துறை தளவிலை விபரப்பட்டியலின் அடிப்படையில் கணக்கிடப்படும் சதுரடி மதிப்பு இதில் எது அதிகமோ அதற்கான முத்திரைத் தீர்வை சேர்க்கப்பட வேண்டும். அவ்வாறு ஆவணதாரரால் உறுதிமொழி அளிக்கப்படும் நிலையில், உயர் மதிப்பிற்கான முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் வசூலித்து களப்பணி மேற்கொள்ளாமல் ஆவணத்தை திரும்ப வழங்கலாம்.

கட்டட களப்பணி மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டடங்கள்

ஆவணச் சொத்தில் கட்டுப்பட்ட கட்டடத்தின் மதிப்பு 5 கோடிக்கும் அதிகமானதாக இருப்பின் அங்கீகரிக்கப்பட்ட கட்ட மதிப்பாளரால் (Certified Chartered Engineer) கட்டடம் மதிப்பிடப்பட்டு. அவ்வறிக்கை ஆவணத்துடன் இணைக்கப்பட வேண்டும். இத்தகைய ஆவணங்களைப் பொறுத்து இணைக்கப்படும் படிவம் 1-Aல் அங்கீகரிக்கப்பட்ட கட்ட மதிப்பாளரால் (Certified Chartered Engineer) ன் மதிப்பு அல்லது பொதுப்பணித்துறை தளவிலை விபரப்பட்டியலின் அடிப்படையில் கணக்கிடப்படும் சதுரடி மதிப்பு (கட்டட வகைப்பாட்டின் பட்டியல் இணைப்பு -II(A) முதல் II(E) வரை இணைக்கப்பட்டுள்ளது) இதில் எது அதிகமோ அதற்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்துவதாக ஆவணதாரரின் உறுதிமொழி சேர்க்கப்பட வேண்டும். அவ்வாறு ஆவணதாரரால் உறுதிமொழி அளிக்கப்படும் நிலையில், உயர் மதிப்பிற்கான முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் வசூலித்து களப்பணி மேற்கொள்ளாமல் ஆவணத்தை திரும்ப வழங்கலாம்.

ஆவணதாரரால் மேற்கண்டவாறு உறுதிமொழி அளிக்கப்படவில்லை எனில், உதவி செயற்பொறியாளரின் களப்பணிக்காக ஆவணம் அனுப்பப்பட வேண்டும். உதவி செயற்பொறியாளர் மதிப்பீட்டறிக்கை பெற்று அதன் அடிப்படையில் முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் வசூலித்து ஆவணத்தை திரும்ப வழங்கலாம்.

ஆவணதாரர்கள் கட்டட மதிப்பீட்டின் அதிகபட்ச மதிப்பினை ஏற்க உறுதிமொழி அளிக்க மறுக்கும் நிலையில், கட்டடத்தின் மதிப்பு 5 கோடிக்கு கீழ் இருப்பின் சார்பதிவாளரும். 5 கோடிக்கு மேல் இருப்பின் உதவி செயற்பொறியாளருக்கும் கட்டடத்தின் மதிப்பினை நிர்ணயம் செய்ய ஆவணம் அனுப்பப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

திரையரங்கம், ஆலை, தொழிற்சாலை, திருமண மண்டபம், பள்ளி, கல்லூரி கட்டங்கள், கோழிப்பண்ணை. நவீன அரிசி ஆலை. வணிக வளாகங்கள், அலுவலக வளாகங்கள், தங்கும் விடுதிகள். உணவு விடுதிகள், நூற்பாலைகள். தோல் பதனிடும் தொழிற்சாலைகள். கிடங்குகள். தொழிற்கூடங்கள், உயர்கூரை கட்டடங்கள் போன்ற சிறப்பு தன்மை கொண்ட கட்டடங்கள் மதிப்பு உச்ச வரம்பின்றி உதவி செயற்பொறியாளர்களால் மதிப்பிடப்பட்டுவந்த நடைமுறை மாற்றம் செய்யப்பட்டு, இவ்வகை கட்டங்களைப் பொறுத்து மதிப்பீடு மேற்கொள்வதில் மேற்கண்ட திருந்திய நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணத்தில் கட்டடங்கள் மறைப்பதனை தடுக்கும் பொருட்டு, Geo-coordinates உடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட வேண்டும் என  சுற்றறிக்கையின்வழி இந்நடைமுறை தொடரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தப்படுகிறது. மேற்கண்ட அறிவுறுத்தல்கள் அனைத்து அலுவலர்களாலும் தவறாது பின்பற்றப்பட வேண்டும் எனவும், அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாதது கடுமையாக நோக்கப்படும் எனவும், பின்பற்றத்தவறின் அதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks