லண்டனில் முதலமைச்சர் விஜய்

தொழில் முதலீடுகள் ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் விஜய் நேற்று முன்தினம் லண்டன் புறப்பட்டு சென்றார். இதனையடுத்து நடிகர் அஜித்குமார் கலந்து கொண்ட கார் பந்தய போட்டியையும் தொடங்கிவைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் கடந்த 3.9.2026 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன்கீழ், தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த "மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்" (Motor Sports City) தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

அஜித்குமார் கார் ரேஸ்- தொடங்கி வைத்த சிஎம் விஜய்

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர். தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்ததை செயல்படுத்தும் வகையில், இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டிற்கு நேரில் சென்று. அங்குள்ள Race Control மற்றும் Race circuit பகுதிகளையும் பார்வையிட்டதோடு, சர்வதேசஅளவிலான நீண்டதூர கார் பந்தயத்தை நடத்துவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், செயல்பாட்டு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சில்வர்ஸ்டோன் ரேஸ் மியூசியத்தையும் பார்வையிட்டார்.

தமிழகத்தில் கார் ரேஸ் மைதானம்

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் சில்வர்ஸ்டோன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத் திடலில், பிரபல நடிகரும், மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் அவர்கள் கலந்துகொண்ட 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதன்மூலம், சர்வதேச அளவிலான நீண்டதூர மோட்டார் பந்தயங்களில் நிலவும் பிரம்மாண்டம். நவீன தொழில்நுட்பம், சிறப்பான நிர்வாக ஏற்பாடுகள் மற்றும் விளையாட்டுத் திறன் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததோடு. உலகளாவிய தளங்களில் இந்தியத் திறமையாளர்களின் பங்கேற்பை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் இப்பயணம் ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article