செப்டம்பரில் தொடர் விடுமுறை

விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான், அந்த வகையில் செப்டம்பர் மாதம் விடுமுறையை அள்ளிக்கொடுக்கும் மாதமாகவே அமைந்துள்ளது. அந்த வகையில் தொடர் விடுமுறை கிடைப்பதால் மாணவர்களும், அரசு ஊழியர்களும் குஷியில் உள்ளனர்.குறிப்பாக வார விடுமுறையோடு சேர்த்து கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை வந்ததால் செப்டம்பரில் 4,5 மற்றும் 6 என தொடர் விடுமுறையானது கிடைத்தது. இதில் அடுத்த வாரமே மீண்டும் தொடர்ந்து 3 நாள் விடுமுறை கிடைக்கும் வகையில் செப்டம்பர் 12, 13 மற்றும் விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி செப்டம்பர் 14 ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக சுற்றுலா செல்லவும், உறவினர்கள் வீட்டிற்கு செல்லவும் திட்டமிட்டனர்.

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

இந்த நிலையில் அடுத்த விடுமுறை எப்போது வரும் என காத்திருந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழாவாகும். இந்த விழா வருகிற 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து வருகிறது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பல மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரம் பேர் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு, விழா நடைபெறும் நாளான 17.09.2026 (வியாழக்கிழமை) அன்று மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது

செப்டம்பர் 17 விடுமுறை- செப்டம்பர் 26 பணி நாள்

மதுரை மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இவ்விடுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வருகிற 26.09.2026 (சனிக்கிழமை) அன்று மதுரை மாவட்டத்தில் முழு பணிநாளாகச் செயல்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் அவசரப் பணிகளைக் கவனிக்கும் வகையில் மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்சப் பணியாளர்களுடன் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article