Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
News Image

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளரான நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்து ஒன்று சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி

சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. 100 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை, வெள்ளித்திரை, பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்வார்கள். முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

இந்த பிக்பாஸ் 10 சீசனில் லட்சுமி பிரியா, ஷாதிகா, பிருத்வி நாத், ஜாவித் ஷெரீப், முத்தழகி, அஸ்மிதா நீலமேகம், அவினாஷ் அசோக், சாந்தினி தமிழரசன், பிளான் பாண்டி, குமரன், சவின்யா வேலு, வினோத் பாபு, வெங்கட ராகவன் ரங்கநாதன், தன்யா, அடாவடி அன்சார், முகேஷ் ஆகிய பிரபலங்களோடு பொதுமக்களில் இருந்து ஜேசன் கௌஷி, முனியம்மாள், ஷாமா, மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பிளாக் பாண்டி மட்டும் உடல்நல பிரச்னையால் வெளியேறியுள்ளார். அதேபோல் சவின்யா வேலு வாக்கெடுப்பு முறையில் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் ஜனநாயக அறை

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டிலும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.வீட்டினுள் ஜனநாயக அறை என்னும் அமைப்பு உள்ளது. ஆளும் அணியினர் மற்றும் எதிர் அணியினர் என இரு அணிகளாக பிக்பாஸ் போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அறையில் தான் விவாதங்கள், முடிவுகள் எடுக்கப்படுகிறது, நடிகை ஷாதிகா தான் ஆளும் அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

விஜய் சேதுபதி சர்ச்சை கருத்து

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை வார கடைசி என்பதால் விஜய் சேதுபதி கலந்துக் கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்போது ஜனநாயக அறை பற்றிய கேள்விகளை அவர் எழுப்பினார். தொடர்ந்து நடிகை ஷாதிகாவின் செயல்பாடுகள் குறித்து பேசியபோது, “தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல், தலைமைப் பண்பு பற்றி தெரியாமல், வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்து விட்டு, பிரச்னைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியைத் தூக்கிப் போட்டு விட்டு அங்கிருந்து தெறிச்சி ஓடுவது என்பது தலைவன் என்ற பொறுப்புக்கான தகுதி கிடையாது. அது ஏமாற்று வேலை” என தெரிவித்தார்.

அவ்வளவு தான். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலரும் முதலமைச்சர் விஜயை மறைமுகமாக குறிப்பிட்டு விஜய் சேதுபதி இப்படி பேசுகிறார் என சரமாரியாக சாடி வருகின்றனர். ஆனால் விஜய் சேதுபதி பொதுவாக யார் பெயரையும் குறிப்பிடாமல் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks