RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு

RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
News Image

TN Govt On RTI Act: தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

RTI தொடர்பான தமிழ்நாடு அரசின் புதிய அரசாணை:

அரசு பல்வேறு துறைகளில் முன்னெடுத்து வரும் பணிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் அறிந்துகொள்ள, தகவல் அறியும் உரிமை சட்டம் வழிவகை செய்கிறது. இதனால் தேசிய அளவில் பல ஊழல்கள், குற்றங்கள் மற்றும் ரகசியங்கள் கூட அம்பலமாக்கியுள்ளன. இந்நிலையில் தான், சட்ட-ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இனி பதிலளிக்கப்படாது என, தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

புதிய அரசாணை சொல்வது என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-இன் (2005-ஆம் ஆண்டின் மத்தியச் சட்டம் 22) பிரிவு 24-இன் உட்பிரிவு (4)-இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்தி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான பொதுத் துறை (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரிவை, மேற்படி சட்டத்திற்கு பொருந்தாத அமைப்பாக இதன் மூலம் அறிவிக்கிறார்”என குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த விவகாரங்களை இனி அணுக முடியாது?

அரசாணையின்படி, ”சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு கையாளும் முக்கிய விவகாரங்கள் பின்வருமாறு: வகுப்பு மற்றும் சாதி மோதல்கள், சட்டம்-ஒழுங்கு தொடர்பான விசாரணை ஆணையங்களை அமைத்தல் மற்றும் அவற்றின் பரிந்துரைகள் மீதான தொடர் நடவடிக்கைகள், COFEPOSA மற்றும் NSA சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் தடுப்புக் காவல் நடவடிக்கைகள் (இதில் தடுப்புக் காவலில் உள்ளவர்களின் முறையீடுகள் மற்றும் உயர் நீதிமன்றம்/உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் அல்லது அவர்கள் சார்பாகத் தாக்கல் செய்யப்படும் ஆட்கொணர்வு மனுக்கள் ஆகியவை அடங்கும்), மாதந்தோறும் சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்புச் சட்டம்-ஒழுங்கு கூட்டங்களை நடத்துதல்,

காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு குறித்த PSO 150(3) (பழைய எண் 144(3))-ன் கீழான விசாரணை அறிக்கைகள் மற்றும் காவல் நிலையங்களில் நிகழும் மரணங்கள், காவல் துறை சித்திரவதை மற்றும் விசாரணைக் கைதிகளின் மரணம் குறித்த PSO 151 (பழைய எண் 145)-ன் கீழான விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்தல், சட்டம்-ஒழுங்குப் பிரிவு கையாளும் விவகாரங்கள் தொடர்பான தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) குறிப்புகள், சட்டம்-ஒழுங்கு மற்றும் வகுப்புவாதச் சம்பவங்கள் குறித்த மாதாந்திர அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்புதல், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்தல், மாணவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் போராட்டங்கள், அரசியல் காரணங்கள், வகுப்பு/சாதி மோதல்கள், அரசியல் போராட்டங்கள், மாணவர் போராட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளைக் கையாளுதல், அவதூறான கட்டுரைகள், செய்திகள், பேச்சுகள் போன்றவற்றிற்காக வழக்குத் தொடர அனுமதி அளிப்பது தொடர்பான விவகாரங்கள்” குறித்த தகவல்களை இனி அணுக  முடியாது.

இதையும் படியுங்கள்: Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?

இதுதான் வெளிப்படைத்தன்மையா?

தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்தால் வெளிப்படைத்தன்மையான அரசு நிர்வாகத்தை முன்னெடுப்போம் என விஜய் வாக்களித்து இருந்தார். ஆனால், அவர் முதலமைச்சரான பிறகு பிறப்பிக்கப்பட்ட பல அரசாணைகள் இதுவரை பொதுவெளியில் இடம்பெறவில்லை. சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எழுதிய கடிதம் குறித்து கூட ஒருமாதம் கழித்தே வெளியானது. இந்நிலையில் தான் மாநிலத்தில் சட்ட-ஒழுங்கு சரியில்லை என கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், அதுதொடர்பான கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்க முடியாது என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மக்களின் தகவல் அறியும் உரிமையை பறிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks