கரூர் பெருந்துயரத்தை ஒரு சமூக வலைத்தள பதிவிற்குள் சுருக்க நினைப்பது எவ்வளவு பெரிய அநியாயம் ? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் ஜோசப் விஜய், பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பறிபோன முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. என் நெஞ்சில் குடியிருக்கும் என தனது பேச்சைத் தொடங்கும் தவெக தலைவர் ஜோசப் விஜய், தன்னை பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருந்த நேரத்தில் அதற்கு தார்மீக பொறுப்பேற்காமல் புறமுதுகிட்டு ஓடிவிட்டு தற்போது அப்பெருந்துயரத்தை ஒரு சமூக வலைத்தள பதிவிற்குள் சுருக்க நினைப்பது எவ்வளவு பெரிய அநியாயம் ?

உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிவாரணமும், பணிப்பலன்களும் மட்டுமே தீர்வாக அமையாது என்பதோடு, தமிழக மக்களின் மனங்களில் அழியாத ரணமாக பதிந்திருக்கும் பெருந்துயரம் தொடர்பாக சி.பி.ஐ மேற்கொள்ளும் விசாரணையை விரைவுபடுத்தி அதற்கு காரணமானவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதே உயிரிழந்த 41 பேருக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம்

முன்னதாக, கரூர் துயரச் சம்பவத்தையொட்டி, முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளப்பக்கத்தில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி’ என்று பதிவிட்டிருந்தார்.

Source: Read Full Article