மேடை கிடைத்தாலே கொச்சையாக பேசுவது தான் வேலையா? - திமுகவை விளாசிய தவெக!

மேடை கிடைத்தாலே கொச்சையாக பேசுவது தான் வேலையா? - திமுகவை விளாசிய தவெக!
News Image

மேடை கிடைத்துவிட்டால் கொச்சையாக பேசுவதுதான் வாடிக்கையாகிவிட்டது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தவெக ஐடி விங் கடுமையாக சாடியுள்ளது.

தாராபுரத்தில் உதயநிதி பேச்சால் சலசலப்பு

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய ஒரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற்று, பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 9ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் தொகுதி முழுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசிய சில கருத்துகள் கடும் சர்ச்சைகளை கிளப்பியது. அதாவது, “மதுராந்தகம் தொகுதியில் தமிழக முதலமைச்சர் விஜய் பேசியதைச் சுட்டிக்காட்டி 30 நிமிடங்களில் 32 முறை திமுக என்று சொல்கிறார். அவருக்கு திமுகவை தவிர எதுவும் தெரியாது.  முதலமைச்சருக்கு திமுக மீது அவ்வளவு பயம் என கூறினார். தொடர்ந்து புதிய தலைமைச் செயலகம் பற்றி பேசிய உதயநிதி, கடலைப் பார்த்தவாறு இருந்தால் தான் முதலமைச்சருக்கு மூட் வரும் போல என சொல்லவும் அங்கிருந்த அனைவரும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தனர்.

உதயநிதியின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகளைப் பெற்றுள்ளது. அவர் பேசியது திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கே முக சுழிப்பை ஏற்படுத்தியதாக வீடியோ ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவராகப் பேச வேண்டிய பேச்சு இதுதானா?

​பரம்பரை பரம்பரையாகக் கட்சியையும் ஆட்சியையும் தங்கள் குடும்பச் சொத்தாக நினைப்பவர்களுக்கு, மக்கள் நலனைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?

​மேடை கிடைத்துவிட்டால் போதும்...கொள்கை, சாதனைப் பற்றிப் பேசத் தெரியாது,…
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 26, 2026

ஆபாசப் பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி

இந்நிலையில் உதயநிதியின் பேச்சுக்கு தவெக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “எதிர்க்கட்சித் தலைவராகப் பேச வேண்டிய பேச்சு இதுதானா? பரம்பரை பரம்பரையாகக் கட்சியையும் ஆட்சியையும் தங்கள் குடும்பச் சொத்தாக நினைப்பவர்களுக்கு, மக்கள் நலனைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது? மேடை கிடைத்துவிட்டால் போதும்...கொள்கை, சாதனைப் பற்றிப் பேசத் தெரியாது, கொச்சையாக, நாலாந்தரமாக பேசுவதுதான் வாடிக்கையாகிவிட்டது. எனவே, ஆபாசமாகப் பேசுவதையும், தனிநபர் அருவருப்பான விமர்சனங்களை வைப்பதையும் மட்டுமே தங்கள் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். குடும்ப ஆட்சி நடத்தி, கொத்தடிமைக் கூட்டத்தை மேய்த்தவர்களின் உண்மையான முகமும் லட்சணமும் இதுதான் என்பதை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். உங்கள் ஆபாசப் பேச்சுக்களுக்கு இடைத்தேர்தல் முடிவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks