Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?

Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
News Image

Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கை விசாரிக்க, ஐஜி தேன்மொழி தலைமையில் 4 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக்குழு

தொழிலதிபர் ஜெம் வீரமணி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்துள்ள புகார், தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. இந்த வழக்கில் அவர் மட்டுமின்றி, வீரமணியின் உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மற்றும் கணேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதோடு, காவல்துறை உயர் அதிகாரிகள் பணத்தை பெற்றுக்கொண்டு வழக்கை முடிக்க முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 3 முக்கிய அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான், ஜெம் வீரமணி வழக்கை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழு விவரம்:

மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையரான தேன்மொழி ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மேற்கு சட்ட-ஒழுங்கு இணை ஆணையர்  திஷா மிட்டல், டிஜிபி அந்தஸ்தில் உள்ள முத்தரசி மற்றும் குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சென்னை துணை ஆணையர் கீதாஞ்சலி ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளும் இந்த புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.  இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவானது, சென்னை பெருநகரக் காவல் ஆணையரின் மேற்பார்வையின் கீழ் செயல்படும். சென்னை பெருநகரக் காவல் ஆணையர் இதற்கான தேவையான வசதிகளை வழங்குவார் என தமிழ்நாடு சட்ட-ஒழுங்கு டிஜிபி மகேஷ் குமார் அகரால் அறிவித்துள்ளார்.

அடுத்தடுத்து கிளம்பும் பகீர் சம்பவம்:

தொழிலதிபர் ஜெம் வீரமணி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கடந்த 2025ம் ஆண்டு பென் ட்ரைவ் உடன் சென்னை காவல் ஆணையரகத்திற்கு புகார் கிடைத்தது.  அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுமார் 7 மாத கால விசாரணைக்குப் பிறகு, போதிய ஆதாரங்கள் இல்லை எனவும், தொடர்ந்து விசாரிக்க முகாந்திரம் இல்லை என குறிப்பிட்டும் வழக்கை முடிக்க காவல்துறை அறிக்கை சமர்பித்துள்ளது. ஆனால், நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து வழக்கை தீவிர விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட்டது. அதன்படி, சென்னை மாநகர புதிய காவல் ஆணையரான அமல்ராஜ் உத்தரவின் பேரில், ஜெம்வீரமணி கைது செய்யப்பட்டார். அதன் நீட்சியாக அவரது உதவியாளர்களான சாந்தி அவரது கணவர் மற்றும் மற்றொரு உதவியாளர் கணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: Perungalathur Road Over Bridge: 2 வருட வெயிட்டிங்..! பெருங்களத்தூர் மேம்பால கடைசி கிளை ரெடி - GST ரோட் காலி, ஃப்ரீயா போகலாம்

வழக்கை மூடிமறைக்க கோடிகளில் புரண்ட பணம்

இதனிடையே, கடந்த 2024ம் ஆண்டே இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டும், எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரஞ்சன் குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரம், 2025ம் ஆண்டு வழங்கப்பட்ட மற்றொரு புகாரில் வழக்குப்பதிவு செய்த நிலையில், வீரமணியிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வழக்கை முடித்துவைக்க காவல்துறை உயர் அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். அதன் நீட்சியாகவே சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையாளர் அருண், முன்னாள் கூடுதல் ஆணையாளர் கண்ணன் மற்றும் உதவி ஆணையர் யாஸ்மின் ஆகியோர் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் ஜெம் வீரமணி வழக்கை விரைவாக விசாரிக்க புதிய சிறப்பு புலனாய்வு குழுவை காவல்துறை அமைத்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks