நள்ளிரவு வீடியோ கால்... பெண் காவலர் புகார்: புதுச்சேரி எஸ்.பி. சுப்ரமணியன் சஸ்பெண்ட் - விசாரணையில் நடந்தது என்ன?

நள்ளிரவு வீடியோ கால்... பெண் காவலர் புகார்: புதுச்சேரி எஸ்.பி. சுப்ரமணியன் சஸ்பெண்ட் - விசாரணையில் நடந்தது என்ன?
News Image

புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றி வரும் எஸ்.பி. சுப்ரமணியன் மீது பெண் காவலர் அளித்த பாலியல் தொல்லை புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காவல் துறையில் எஸ்.பி. பதவியில் பணியாற்றி வரும் சுப்ரமணியன், இதற்கு முன்பு காரைக்கால் பகுதியில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. அப்போது அங்குள்ள காவல் நிலையத்தில் பணியாற்றிய திருமணமான பெண் காவலருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து வந்த குறுஞ்செய்திகள்

பின்னர் சுப்ரமணியன் பணிமாறுதல் பெற்று புதுச்சேரிக்கு சென்ற பிறகும், அந்தப் பெண் காவலருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதுடன், நள்ளிரவு நேரங்களிலும் வீடியோ அழைப்புகளை மேற்கொண்டு தொந்தரவு செய்ததாக பெண் காவலர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் எல்லை மீறியதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறிய பெண் காவலர், உயர் அதிகாரியிடம் புகார் அளித்ததாகத் தெரிகிறது.

தலைமை அலுவலகத்தில் புகார்

உயர் பதவியில் உள்ள காவல் அதிகாரி மீது பெண் காவலர் அளித்த புகார் என்பதால், இந்த விவகாரம் காவல் துறை தலைமையகத்தின் கவனத்திற்கு சென்றது. புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் உட்புகார் குழு அமைக்கப்பட்டது.

சீனியர் எஸ்.பி. நித்யா தலைமையிலான குழு, பெண் காவலர் அளித்த புகார், குறுஞ்செய்திகள், வீடியோ அழைப்புகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

விசாரணை அறிக்கை தாக்கல்

விசாரணையின் போது புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. விசாரணையின் முடிவில், எஸ்.பி. சுப்ரமணியன் மீது பெண் காவலர் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் அடிப்படை இருப்பதாக விசாரணைக் குழு முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கை புதுச்சேரி காவல் துறை டி.ஜி.பி.யிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

தலைமைச் செயலர் அதிரடி நடவடிக்கை

காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கை, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக புதுச்சேரி அரசின் தலைமைச் செயலர் சரத் சவுகானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அறிக்கையைப் பரிசீலித்த தலைமைச் செயலர், ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாக எஸ்.பி. சுப்ரமணியனை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பு

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்யும் பொறுப்பில் உள்ள காவல் துறையில், உயர் பதவியில் இருக்கும் அதிகாரி மீது பெண் காவலர் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு முன்வைத்து, அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது புதுச்சேரி காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்டமாக மேலும் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது குறித்த எதிர்பார்ப்பு காவல் துறை வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks