மரகத சிலை திருட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருக்கரணை கிராமத்தில் மலை மேல் அமர்ந்திருக்கும் ஸ்ரீ மரகத பால தண்டாயுதபாணி முருகன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவர் சிலை என்பது சுமார் 2 1/4 அடி உயரம் கொண்ட முழுமையான மரகத சிலை ஆகும் இவை பச்சை நிறத்தில் மிக அழகாக காட்சியளிக்கும் திருக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் சஷ்டி விரதம் தைப்பூசம் ஆகிய விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிகமாக மொட்டை அடித்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடனை செய்வார்கள். எனவே இந்த சிலைக்கு அமைந்துள்ள மூல சன்னதிக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கொண்ட கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

மரகத சிலை திருட்டு நடந்தது எப்படி.?

இது மட்டுமில்லாமல் மூல சன்னதிக்குள் யாரும் செல்ல முடியாத வகையில்,திருடர்கள் நுழைந்தால் மலை மீது கோவில் என்பதால் அபாய ஒலி எழுப்பும் கருவியும், சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தனை பாதுகாப்புகளையும் மீறி மூலகர் மரகத சிலை திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் மூன்று கதவுகளை உடைத்து, அங்கிருந்த 16 'சி.சி.டி.வி' கேமராக்களின் ஒயர்களை அறுத்து, அபாய ஒலி எழுப்பும் கருவிகளை செயல் இழக்க செய்துள்ளனர். எனவே பல நாட்களாக நோட்டமிட்ட பிறகே சிலை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்தீபக் ரஜினி தலைமையில் சிறப்பு படையை அமைத்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் விளக்கம்

இந்த நிலையில் கோயில் சிலை திருட்டு தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்கரணை கிராமத்தில் உள்ள நடுபழனி பாலமுருகன் மரகத தண்டாயுதபாணி திருக்கோவிலில், 01.09.2026 அன்று இரவு மர்ம நபர்களால் 2 அரை அடி உயரமுள்ள மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சுவாமி சிலை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

3 லட்சம் மதிப்பிலான சிலை

மேற்படி மரகத சிலை கடந்த 2008-ஆம் ஆண்டு மைசூரைச் சேர்ந்த கணபதி சச்சிதானந்த சுவாமிகள் டிரஸ்ட் மூலம் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவருகிறது. மேற்படி சம்பவம் தொடர்பாக, உடனடியாக சித்தாமூர் காவல் நிலைய ஆதாரங்களின் அடிப்படையில், குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கைது செய்ய 6 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article