பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். தற்போது அவர் என்ன செய்கிறார் என்பது பற்றிக் காணலாம்.

விமானப்படை வீரர் அபிநந்தன்

இந்திய விமானப்படையில் போர் விமானியாகத் தனது பணியைத் தொடங்கியவர் அபிநந்தன். 1983ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி சென்னையில் பிறந்த அவர் 22 ஆண்டுகள் பணியாற்றியுள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

மறக்க முடியாத சம்பவம்

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் புல்வாமா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. இந்திய ராணுவ வரலாற்றில் ஒரு மிக கொடூரமான தாக்குதலாக கருதப்படும் இதில் 40 பாதுகாப்புப் படை வீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது உடனடியாக பொறுப்பேற்றார்.

இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தான் மாநிலம் பாலகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப்படையின் மிராஜ்-2000 போர் விமானங்கள் குண்டுகள் வீசி அழித்தன. இந்த வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட வான்வெளி மோதலில் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் அரசால் சிறைபிடிக்கப்பட்டார்.

வான்வழித் தாக்குதலில் பாகிஸ்தான் ஏவுகணையால் அபிநந்தன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அவர் பாராசூட் மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கினார். சுமார் 3 நாட்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். அந்த நிலையிலும்அபிநந்தன் அமைதியாகவும், ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்த மறுத்தும் மிகுந்த ஒழுக்கத்தையும் தைரியத்தையும் வெளிப்படுத்தினார். இதனால் உலகம் முழுவதும் அபிநந்தன் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். சர்வதேச அளவில் எழுந்த அழுத்தம் காரணமாக மார்ச் 1ம் தேதி அபிநந்தன் வாகா எல்லை வழியாக இந்தியாவிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.

இப்போது என்ன செய்கிறார் அபிநந்தன்?

அபிநந்தன் சேவை மற்றும் அசாத்திய வீரத்தைப் பாராட்டி வீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. அதேபோல் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு அபிநந்தன் என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். மேலும் அபிநந்தன் வைத்திருந்த மீசை ஸ்டைலும் இளைஞர்களிடையே பிரபலமானது. 6 ஆண்டுகள் ஆகியும் அபிநந்தனை மக்கள் மறக்கவில்லை. ஆனால் அவர் சத்தமே இல்லாமல் விமானப்படையில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ளார். இவர் கடந்த மார்ச் 31ம் தேதியிலிருந்து பணியிலிருந்து விலகினார். அபிநந்தன் தற்போது ஃபிளை91 (FLY91) என்ற தனியார் பிராந்திய விமான நிறுவனத்தில் வணிகரீதியான பைலட்டாக இணைந்து தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். விரைவில் அவர் உள்நாட்டு வழித்தடங்களில் ATR 72-600 ரக பயணிகள் விமானங்களை இயக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

Source: Read Full Article