மதுரை ஒத்தக்கடை: குப்பை கிடங்குக்கு பொதுமக்கள் பூட்டு... மீண்டும் திறந்தால் போராட்டத்தில் இறங்க முடிவு !

மதுரை ஒத்தக்கடை: குப்பை கிடங்குக்கு பொதுமக்கள் பூட்டு... மீண்டும் திறந்தால் போராட்டத்தில் இறங்க முடிவு !
News Image

திடீரென அமைக்கப்பட்ட குப்பை கிடங்கால் நோய்த்தொற்று, துர்நாற்றம், கொசு, ஈக்களின் தொல்லை குப்பை கிடங்கை  உடனடியாக அகற்றக்கோரி பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு

மதுரை யா.ஒத்தக்கடை வெளவால் தோட்டம் பகுதியினை சுற்றி ஆயிரகணக்கான குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக குடியிருப்பு மருத்துவமனை அருகிலேயே  திருவள்ளுவர் நகர் பகுதியில் கண்மாயினை ஆக்கிரமித்து குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஒத்தக்கடை சுற்றுப்புற பகுதியில்  சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இந்தக் குப்பை கிடங்கில்  கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம், கொசு மற்றும் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழை நேரங்களில் அதிகமான துர்நாற்றம் வீசுவதாகவும் இது குறித்து பலமுறை அதிகாரிகள் இடத்தில் புகார் அளித்தும் அந்த குப்பை கிடங்கை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மதுரை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலையில் அமர்ந்து அதிகாரிகளையும் தமிழ்நாடு அரசினையும் கண்டித்து கோஷங்களை எழுப்பி  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல்

ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் காரணமாக மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மட்டும் பி.டி.ஓ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர், இந்த குப்பை கிடங்கை மூடினால் மட்டுமே சாலை மறியல் போராட்டம் கைவிடப்படும் என பொதுமக்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகளை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு அந்தக் குப்பை கிடங்கை பொதுமக்களே பூட்டு போட்டு மூடினர். மீண்டும் இந்த குப்பை கிடங்கை திறந்து இந்த பகுதியில்  குப்பைகளை கொட்டினால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் எனவும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர் .

பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரியை வலுக்கட்டாயமாக  கூட்டிச்சென்று குப்பை கிடங்கை பொதுமக்களே பூட்டு போட்டு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks