CM Vijay Investment Trip: முதலமைச்சரான பிறகு முதல்முறையாக விஜய் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் பிரிட்டனில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் விஜயின் வெளிநாட்டு பயணம்?

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்பு மாநில தொழில்வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதனால் ஆரம்ப நாட்கள் முதலே பல தரப்பட்ட தொழில் நிறுவனங்களை சார்ந்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்து, புதிய முதலீடுகளை மேற்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் நடைபெற்ற புதிய அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனிடையே, உள்ளூரில் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முதலமைச்சர் விஜய் ஆர்வம் காட்டுகிறாராம். அந்த நோக்கத்திலான தனது முதல் வெளிநாட்டு பயணத்தை முதலமைச்சர் விஜய் செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ள இருக்கிறாராம்.

பிரிட்டனுக்கு பறக்கும் முதலமைச்சர் விஜய்?

தென்மாநிலங்களில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. ஆந்திர முதலமைச்சரின் மகனும். அமைச்சருமான நாரா லோகேஷ் வெளிநாடுகளில் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலீடுகளை ஈர்ப்பதில் தீவிரமாக களமாடி வருகிறார். அதற்கு ஈடு கொடுக்க தமிழ்நாடு அரசும் முனைப்பும் காட்டி வருகிறது. அந்த வகையில் தான், முதலமைச்சர் விஜய் தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினருடன் வரும் செப்டம்பர் 10ம் தேதி பிரிட்டன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழு தொடர்ந்து 16ம் தேதி இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட ஒருங்கிணைந்த பிரிட்டனின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள தொழில் நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளனராம். இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் முதலமைச்சரான பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

தைவான் பறக்கும் அமைச்சர் கீர்த்தனா..!

இதனிடையே, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இந்த வாரம் தைவான் நாட்டிற்கு, வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் பயணிக்க உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, வரும் 4ம் தேதி நடைபெற உள்ள செமி கண்டக்டர், செயற்கை நுண்ணறிவு சிப் உள்ளிட்ட தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் செமிகான் மாநாட்டில் அமைச்சர் தலைமையிலான குழு பங்கேற்க உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என நேற்று தான் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு அமைச்சரின் தைவான் பயணம் முக்கிய பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Lionel Messi: போதும்பா முடிச்சுக்கலாம்..! சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸியின் அதிரி புதிரி சாதனைகள் - முழு லிஸ்ட்

Source: Read Full Article