சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(22.09.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 22-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர்

ஜஸ்வந்த் நகர் முதல் மற்றும் இரண்டாம் கட்டம், பாபா நகர், AIBEA நகர், மீனாட்சி அவென்யூ, அன்னமை அவென்யூ, ரெட்டிபாளையம் ரோடு.

திருமுல்லைவாயல்

மாகரல், கொம்மாக்கும்பேடு, தாமரை பாக்கம், கரணி, மோரை, மாதா கோயில், அண்ணாநகர், வீராபுரம், திருமலை நகர், குமரன் நகர், பாரதி நகர், மேட்டுப்பாளையம், அலமதி, அலமதி காலனி, வெண்மணி நகர், பால் பண்ணை, கோவிந்தபுரம், கிருஷ்ணா நகர்.

பட்டாபிராம்

பிருந்தாவன் நகர் 1 முதல் 4-வது தெரு, ராஜீவ் காந்தி நகர் 1 முதல் 7-வது தெரு, சிஆர்பிஎஃப் முகாம், மைக்கேல் நகர், சிஆர்பிஎஃப் நகர், மிட்டனமல்லி காலனி, சிதம்பரம் நகர், உதய சூரியன் தெரு, மிட்டனமல்லி கிராமம், ஹவா நகர், கணேஷ் நகர், பாஞ்சலி அம்மன் கோவில் நகர், பாலவேடு சாலை, பாரதி நகர், ஐசிஎஃப் காலனி, பெரியார் நகர், மசூதி தெரு, சபி நகர், எம்இஎஸ் சாலை, டிஃபென்ஸ் என்கிளேவ், டிஃபென்ஸ் காலனி, எல்லை அம்மன் கோயில், கெங்கு ரெட்டி குப்பம், பாரதி நகர் 1 முதல் 12-வது தெரு, விக்னராஜன் நகர், லட்சுமி நகர், மிட்டனமல்லி கண்டிகை.

காரம்பாக்கம்

கந்தசுவாமி நகர், பொன்னி நகர், அருணாச்சலம் நகர், மோதி நகர், பத்மாவதி நகர், காவேரி நகர், பாரதி நகர், தர்மராஜா நகர், விஸ்வநாதன் தெரு, பிராமணர் தெரு.

காவனூர்

பல்லாவரம் மெயின் ரோடு, மணிகண்டன் நகர், மெட்ரோ ஸ்டார் சிட்டி, மெட்ரோ ஹைடெக் சிட்டி, விஷால் நகர், அன்னை தெரசா நகர், பி டாட் ஜி பீஸ் ஆன் க்ரீன்.

பெரும்பாக்கம்

சேகரன் நகர், இந்திராபிரியதர்ஷினி நகர், கைலாஷ் நகர், குளோபல் மருத்துவமனை மெயின் ரோடு, குருதேவ் காலனி, தூதரகம், காசாகிராண்ட், என்.பி.எஸ். பள்ளி, நூக்கம்பாளையம் மெயின் ரோடு, காந்தி நகர் சொசைட்டி, காசா கிராண்ட் செர்ரி, கே.ஜி. அறக்கட்டளை, கவுரிவாக்கம் மேடவாக்கம் கூட்டு ரோடு, மேடவாக்கம் வேளச்சேரி பிரதான சாலை, ரங்கநாதபுரம், பஜனை கோயில் தெரு, காந்தி நகர் படேல் சாலை, காளீஸ்வரி டவர், சிவகாமி நகர், நல்லதம்பி நகர், சிபிஐ காலனி, சிபிஐ காலனி விரிவாக்கம், ஆண்டனி கிளாஸ், ரவி தெரு, ஜெயச்சந்திரன் நகரின் பகுதி, ஜல்லடியன்பேட்டை, மேடவாக்கம் மெயின் ரோடு, பல்லவன் நகர், பாண்டியன் நகர், புது நகர், இந்தியா புல்ஸ், ஏரிக்கரை சாலை.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article