விவசாயிகளுக்கு குஷி.! எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு- ஒரே ஒரு மெசேஜ் போதும்- தமிழக அரசு அதிரடி

விவசாயிகளுக்கு குஷி.! எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு- ஒரே ஒரு மெசேஜ் போதும்- தமிழக அரசு அதிரடி
News Image

நெல் கொள்முதல் நிலையம்

விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்லபடுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில் கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் இருப்பின் Whatsapp எண் மூலம் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027-ற்கு ஒன்றிய அரசால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156/-லிருந்து ரூ.289/-ஆகவும்,

விவசாயிகள்-ஊக்கத்தொகை அறிவிப்பு

பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131/-லிருந்து .159/- ஆகவும் உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027ல் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 01.09.2026 முதல் கொள்முதல் பருவம் துவங்கப்பட்டு 03.09.2026 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் திட்டத்தினை வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து செயல்படுத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) அடங்கிய அரசாணை 15.09.2026 அன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்

நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027ல் சன்னரகம் நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ.2750/- க்கும் பொதுரகம் நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ.2600/-க்கும் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 03.09.2026 முதல் 20,196 விவசாயிகளிடமிருந்து 1.17 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் எவ்வித சிரமங்களின்றி தங்களது நெல்லினை விற்பனை செய்திடவும் அவ்வாறு விற்பனை செய்திடும் போது கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைபாடுகள் பற்றியோ அல்லது பணம் வசூலிப்பதைப் பற்றியோ தமிழ்நாடு நுகர்பொருள் புகார் தெரிவிக்க வாணிபக் கழகத்தின் "உழவர் உதவி மைய Whatsapp எண். 9500801465-ல்" புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks