Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM

Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
News Image

Vikravandi Sethiyathope NHAI: விக்கிரவாண்டி சேத்தியதோப்பு இடையில் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 66 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை கும்பகோணம் 4 வழி சாலை திட்டம்:

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை கோயில் நகரங்களில் ஒன்றான தஞ்சாவூரூடன் இணைக்கும் வகையிலான, நான்கு வழி சாலை திட்டம் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி மற்றும் கும்பகோணம் வரை இந்த சாலை நீள்கிறது. சுமார் 165 கிலோ மீட்டர் வரையிலான இந்த பணிகளுக்கான மொத்த மதிப்பானது சுமார் 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு இந்த திட்டப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

சோழபுரம் - தஞ்சாவூர் இடையேயான 48 கி.மீ., நீளத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது

சேத்தியாத்தோப்பு - சோழபுரம் இடையேயான 50 கி.மீ., நீளத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன

விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு இடையேயான 66 கி.மீ., நீளத்திற்கான பணிகள் புதிய ஒப்பந்தம் மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தாமதமாகும் விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு பணிகள்

மேற்சொன்னபடி சேத்தியாத்தோப்பு - சோழபுரம் - தஞ்சாவூர் இடையிலான 4 வழி சாலை திட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால்  2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விக்கிரவாண்டி முதல் சேத்தியதோப்பு இடையிலான பணிகள் முழுமையடையாமல் உள்ளன.  விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு இடையேயான பணிகளை ரிலையன்ஸ் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிற காரணங்களால் பணிகள் தொடர்ந்து தாமதமானதால் அந்நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மீதமுள்ள பணிகளை செய்து முடிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, தற்போது பணிகள் மீண்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

முடியாத பணிகள் - ரூ.100 சுங்கக் கட்டணம்

விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு இடையேயான சாலைப் பணிகள் இன்னும் முடியாததாலும், சாலையின் தரம் மோசமாக இருப்பதாலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழியே செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும்  விழுப்புரம் - உளுந்தூர்ப்பேட்டை - ஆண்டிமடம் வழியாக திருப்பி விடப்படுகின்றன. இப்படி இருக்கும் சூழலில் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலையி100 ரூபாய் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முழுமை பெறாத, பயன்படுத்த முடியாத சாலைக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து பணிகள் முடிவடையும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படியுங்கள்: TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை

2027 ஜுனில் பணிகள் முடிவடையும் - NHAI

வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதிலறிக்கை தாக்கல் செய்தது. அதில், “சேத்தியாத்தோப்பு-சோழபுரம்-தஞ்சாவூர் வரையிலான சாலை பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. விக்கிரவாண்டி-சேத்தியாத்தோப்பு வரையிலான சாலை பணிகள் 2027ம் ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்துவிடும்” என்று உறுதியளித்து இருந்தது. இதனை ஏற்ற நீதிபதிகள், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் அல்லது அதற்கு முன்பாகவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

165KM எளிமையான பயணம்:

திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு பணிகள் முடிவடைந்து சென்னை - கும்பகோணம் இடையேயான நான்கு வழி சாலை பயன்பாட்டிற்கு வந்தால் பல்வேறு விதத்திலும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

புதிய சாலையால் சென்னை மற்றும் கும்பகோணம் இடையேயான பயணம் விரைவானதாகவும், எளிதானதாகவும் மாறுகிறது. குறிப்பாக பயண நேரம் கணிசமாக குறையும்

விவசாயப் பொருட்கள் மற்றும் வர்த்தகப் போக்குவரத்து எளிதாகி, உள்ளூர் வியாபாரிகளுக்குப் பெரும் பயன் அளித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது

கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோயில்கள், வரலாற்றுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்களின் பயணம் பாதுகாப்பானதாகவும், எளிதானதாகவும் அமையும்

கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள நெரிசல்கள் தவிர்க்கப்பட்டு, விபத்துகள் இல்லாத சீரான போக்குவரத்து உறுதி செய்யப்படும்

குறுகலான சாலைகளில் பயணங்களை தவிர்ப்பதோடு, சிறு சிறு டவுன்களில் அநாவசியமான போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்படும்

முக்கிய இணைப்பு பகுதிகள்..!

விக்கிரவாண்டி - இத்திட்டத்தின் தொடக்கப் புள்ளி மற்றும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு

பண்ருட்டி - விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான வர்த்தக நகரம்

நெய்வேலி - என்.எல்.சி நிறுவனம் மற்றும் ஆர்ச் கேட் பகுதி

வடலூர் - வள்ளலார் சத்திய ஞான சபை அமைந்துள்ள ஆன்மிக நகரம்

சேத்தியாத்தோப்பு - கடலூர் மாவட்டத்தில் வெள்ளாற்றின் கரையில் உள்ள முக்கிய ஊர்

ஆனைக்கரை - கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ள பகுதி

சோழபுரம் - கங்கை கொண்ட சோழபுரம் அருகில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி

கும்பகோணம் - கோயில்கள் நகரமான டெல்டகளின் முக்கிய மையப் பகுதி

தஞ்சாவூர் - இத்திட்டம் நிறைவடையும் இறுதிப் பெருநகரம்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks