மதுரை தவெக எம்எல்ஏ மீது புகார்

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது பரவும் புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ SR தங்கபாண்டியன் மீது எழுந்திருக்கும் அடுக்கடுக்கான புகார்கள் மதுரையை அதிரவைத்துள்ளது. தவெக தலைவர் விஜய்யின் முகத்தை மட்டும் வைத்து முன்னுக்குப் பின் யோசிக்காமல் வேட்பாளர் பெயர் கூடத் தெரியாமல் விசில் சின்னத்தில் ஓட்டுப் போட்டு விட்டோமோ என்று மதுரை மேற்கில் பலரும் கலங்கும் வண்ணம் இருக்கிறதாம் தங்கபாண்டியின் அடாவடிகள்.

தவெகவினரை மிரள வைத்த தங்கபாண்டியன்

சமீபத்தில் தொகுதி மக்கள் தங்கபாண்டியனின் காரை சூழ்ந்து பல கோரிக்கைகள் பற்றிப் பேசிய போது ,அங்கு கூடிய தவெக தொண்டர்கள் எம்எல்ஏவின் காரை தடுத்து நிறுத்தி கீழே இறங்கி வாங்க அண்ணே கூறினர். ஆனால் எம்எல்ஏ இறங்கலாம் முடியாது என்னனு சொல்லு, இங்க பேசக்கூடாது எதுனாலும் மனுவா கொடுங்க என அவர்களை மிரட்டும் தொனியில் பேசினார். இதனை கேட்டு கோபமடைந்த தவெகவினர் வேறு கட்சியிலிருந்து நம்ம கட்சிக்கு வந்தவங்களுக்கு உடனே பதவி போட்டு கொடுத்திருக்கீங்க நாங்க உங்களுக்காக தேர்தல்ல வேலை பார்த்தோம். உங்களை ஜெயிக்க வைத்தோம் நீங்க எப்படி விஜய் அண்ணனுக்கு இருந்திங்களோ, அதே மாதிரி நாங்களும் இருந்தோம். ஆனா இப்ப எங்களுக்கு எந்த பதவியும் இல்லை என கூறுகிறீர்கள் என ஆவேசமாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

26 லட்சம் பணம் வாங்கி மோசடி

இதற்கு தங்கபாண்டியன் காரை விட்டு இறங்காமலேயே எங்கிட்ட வந்து கேள்வி எல்லாம் கேட்காத என அதிகார தோரணையில் இவர் பேசிய காட்சிகள் இவரது செயல்பாட்டிற்கு சாட்சி என அப்பகுதி மக்கள் மட்டுமல்ல தவெகவினரும் வேதனையோடு கூறி வருகிறார்கள்,இப்போதே தங்கபாண்டியன் இப்படி செயல்பட்டு வருகிறார் என்றால், இன்னும் 5 ஆண்டுகள் என்னென்ன செய்யப்போகிறாரோ.? என்ன அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் கட்சியில் முக்கியப் பதவி வாங்கித் தருவதாக நம்ப வைத்து, S.R. தங்கப்பாண்டி 26 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகவும், பணத்தைத் திரும்பக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தவெக மகளிர் அணி நிர்வாகியான ஷர்மிளா என்பவரின் கணவர் பாலாஜி புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by S R Thangapandi (@mlao_maduraiwest)

முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா.?

இந்த நிலையில், SR தங்கபாண்டி ஒரு அமைச்சர் கூட இல்லை என்ற நிலையில் சமீபத்தில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களைப் பார்த்து பலரும் எதற்கு இந்த ஆர்ப்பாடம் என்று முகம் சுளித்துள்ளனர். நடுரோட்டில் கேக் வெட்டுவது தொடங்கி மேள தாள ஊர்வலம் என பொதுமக்களுக்கு இடையூறுகளுடன் விழா நடைபெற்றுள்ளது. சரி ஏதோ இது ஒரு நாள் விழா தானே என்று நினைத்தால், பின்னணி அப்படி இல்லையாம். எங்கும் ,எல்லாவற்றிற்கும் கட்டில்லாத கமிஷன்,மாமூல் ,பஞ்சாயத்து என்று தனி வசூல் சாம்ராஜ்யத்தை தங்கபாண்டி அமைத்து விட்டதாக கூறுகிறார்கள் மதுரை மேற்கு தொகுதி மக்கள். அடாவடியில் இறங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் விஜய் சொன்னாலும், ஆனால் எம்எல்ஏ தங்கபாண்டியன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Source: Read Full Article