Bigg Boss: "பிக்பாஸ் ஒரு தரித்திரம் பிடிச்ச நிகழ்ச்சி.. உருப்படவே மாட்டாங்க.." கிழித்து தொங்கவிட்ட கூல் சுரேஷ்!

Bigg Boss: "பிக்பாஸ் ஒரு தரித்திரம் பிடிச்ச நிகழ்ச்சி.. உருப்படவே மாட்டாங்க.." கிழித்து தொங்கவிட்ட கூல் சுரேஷ்!
News Image

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ். ரியாலிட்டி ஷோவான இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதி சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் நடிகரும், முதலமைச்சருமான விஜய்யை மறைமுகமாக தாக்கிப் பேசினார். அதற்கு கண்டனம் குவிந்து வருகிறது.

தரித்திரம் பிடித்த நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் போட்டியாளரும், நடிகருமான கூல் சுரேஷ் இந்த நிகழ்ச்சியை மிக கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, நான் பிக்பாஸ் போயிட்டு வந்தவன். பிக்பாஸ் என்பது ஒரு தரித்திரம் பிடித்த நிகழ்ச்சி. அதில் போயிட்டு வந்தவங்க இதுவரை யாருமே உருப்படல. பிக்பாஸ் என்பது 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்.

நீங்களே சிந்தித்துப் பாருங்கள். தயவு செய்து பிக்பாஸை பார்க்காமல், சட்டமன்றத்தில் என்ன நடக்கிறதோ? அதைப் பாருங்கள். சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு நாட்டு நடப்பு என்னவென்று தெரியும். குடும்பம் எப்படி நடத்த வேண்டும் என்று தெரியும்.

கரும்புள்ளி, செம்புள்ளி:

இந்த உலகமே எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரியும். ஆனால், பிக்பாஸைப் பார்த்தால் அவர்களே அரையும் குறையுமாக ஆடவிட்டு அவங்களே சண்டையை மூட்டிவிட்டு அடிச்சுக்க வச்சு பொதுமக்களை திட்டவச்சு உங்க மூஞ்சுல சாணியை கரைச்சு ஊத்தி, கரும்புள்ளி செம்புள்ளி ஊத்தி வெளியில அனுப்புவாங்க.

அதெல்லாம் புரிந்துகொண்டுதான் கமல்சார் நைசா நழுவிட்டாரு. அதுனால பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காம நீங்க எல்லாம் சட்டசபை நிகழ்ச்சியைப் பாருங்க. அப்போதான் நீங்க வாழ்க்கையில எப்படி முன்னுக்கு வரலாம்னு வரும். சட்டசபையை பார்க்காமல் பிக்பாசை பார்த்தால் ஊத்திக்க வேண்டியதுதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

76 நாட்கள்:

கூல் சுரேஷ் கடந்த 2023ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அந்தாண்டு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்டோபர் 1ம் தேதி போட்டியாளராக உள்ளே சென்று டிசம்பர் 17ம் தேதி வரை சுமார் 76 நாட்கள் தாக்குப்பிடித்தார். அந்த சீசனில் 12வது இடத்தை அவர் பிடித்தார்.

48 வயதான கூல் சுரேஷ் சாகலேட் படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து ஸ்ரீ, காதல் அழிவதில்லை, திருடா திருடி, குத்து, ஆய்த எழுத்து, பரமசிவன், தீபாவளி, குசேலன், படிக்காதவன், கந்தகோட்டை என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மிகப்பெரிய நகைச்சுவை வேடத்தில் இதுவரை இவர் நடிக்காவிட்டாலும் இவர் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் ஆவார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து நகைச்சுவையாக பேசி மக்கள் மத்தியில் பிரபலமானவர். பின்னர் தொடர்ந்து ஆடியோ லாஞ்ச் போன்ற நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks