Gurugram Accident CCTV: சாலையில் ஒதுங்கி போக சொன்னதற்காக தன்னை இடித்து தள்ளிய கார் ஓட்டுனர் தொடர்பான வீடியோவை பாதிக்கப்பட்ட பெண்ணே வெளியிட்டுள்ளார்.

பெண் BIKER பகிர்ந்த பகீர் வீடியோ..!

”நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், குருகிராம் சாலையை நான் இன்று பாதுகாப்பற்றதாக உணர்ந்தேன். இடித்து விட்டு தப்பியோடும் இத்தகைய நபர்கள் அஞ்சுவதே இல்லை” இது பாதிக்கப்ப்பட்ட அந்த பெண் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளாகும். கார் இடித்ததும் வேகமாக சென்று கொண்டிருந்த பைக்கில் இருந்து நிலைதடுமாறி அந்த பெண் கீழே விழ, அவரது வாகனமானது பல அடி தூரத்திற்கு சரிந்து சென்றுள்ளது. சியா என்று கூறப்படும் அந்த பெண் இந்த விபத்து தொடர்பான வீடியோ கட்சிகளை மட்டுமின்றி நடந்த நிகழ்வையும் முழுமையாக விவரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடந்தது என்ன? பைக் மீது கார் இடித்தது ஏன்?

சியா வெளியிட்டுள்ள வீடியோவின்படி, “ஞாயிற்றுக்கிழமை அன்று தனது ஏப்ரிலியா ஆர்எஸ் 457 மோட்டார் சைக்கிளில், குருகிராமன் கோல்ஃப் கோர்ஸ் பகுதியில் தனது கூட்டாளிகளுடன் பயணித்து கொண்டிருந்துள்ளார். அப்போது வீடியோவில் காட்டப்பட்டுள்ள காரில் பயணித்த நபர் நீண்ட நேரமாகவே சியாவை பின் தொடர்ந்து வந்துள்ளார்.

Hit-and-run in Gurugram! 🚨

A biker named Siya was hit by a car, after which the driver fled the scene. The entire incident was captured on the camera mounted on the bike. pic.twitter.com/IcLfopqsvO

— Aarnav Sharma✨️ (@sunilaarnav) September 14, 2026

சில நேரங்களில் அந்த நபரை காரை மிகவும் நெருக்கமாக ஓட்டிவந்து ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டுள்ளார். இதனால் அந்த நபரை நோக்கி கையை காட்டி, சிறிது இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் மதுபோதையில் இருந்ததை போன்று காணப்பட்ட நபர், சியாவை வாகனத்தை நிறுத்துமாறு எச்சரித்துள்ளார்.

சாலையிலேயே இடித்து தள்ளப்பட்ட பெண்

இதையடுத்து அந்த காரை முந்தி சென்று, அந்த நபர் தன்னை பின் தொடராத வகையில் சியா வேகமாக சென்றுள்ளார். ஆனால், விடாமல் துரத்தி வந்த நபர், ஒரு கட்டத்தில் அதிவேகமாக சென்று காரின் பக்கவாட்டை கொண்டு சியாவின் பைக்கை இடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் நிலைதடுமாறிய அந்த பெண் சாலையிலேயே கீழே விழுந்துள்ளார். அவரது வாகனம் பல அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும் அந்த பெண்ணின் பைக்கில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: Chennai Radial Road: வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்

தப்பியோடிய கார் ஓட்டுனர்

சியாவை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற காரை அவரது நண்பர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். போக்குவரத்து நிறுத்தத்தில் நின்றிருந்த அந்த வாகனத்தை மறித்து ஏன் விபத்தை ஏற்படுத்தினீர்கள் என கேட்டபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். விபத்தை ஏற்படுத்திய நபர் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சியா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக, இத்தகைய நபர்களால் தான் சாலை பாதுகாப்பு கேள்விக்குறியாவதாகவும், அந்த கார் ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Read Full Article