அரசியலை புரட்டிப்போட்ட சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டது. அந்த வகையில் திராவிட கட்சிகளான திமுக 2வது இடத்திற்கும், அதிமுக 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டது. அதே நேரம் நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக தவெகவிற்கு பல்டி அடித்தது. அடுத்தாக விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தது. அதே நேரம் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக அந்த கட்சியில் இருந்து 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

2 தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

இதனையடுத்து இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போதும் நடைபெறும் என அரசியல் கட்சிகள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் மற்ற 2 தொகுதியான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டியுள்ளது திமுக, அந்த வகையில் மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவையும் களத்தில் இறக்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று வந்தது. இதற்கு முக்கிய காரணமாக திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் என பேசப்பட்டது.

கூட்டணியை கட்சியிடம் ஆதரவு கேட்ட ஸ்டாலின்

தற்போது திமுக கூட்டணியில் இருந்த பெரும்பான்மையான கட்சிகள் ஆளுங்கட்சியான தவெகவிற்கு பல்டி அடித்துள்ளது. திமுக கூட்டணியில் தற்றோது தேமுதிக,மனித நேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த கட்சிகளிடம் திமுக வேட்பாளர்கள் நேரில் சென்று ஆதரவு திரட்டி வருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று தேமுதிகவின் ஆண்டு விழாவையொட்டி கோயம்பேடு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது. அதனை அவர்கள் எடுத்துள்ளார்கள். எங்களை பொறுத்தவரை திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறோம்.

இரண்டு தொகுதியில் பிரச்சாரம்- பிரேமலதா

நிச்சயமாக அனைவரும் இணைந்து உழைப்போம். வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரண்டு தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளதாகவும், தேமுதிக ஆதரவு தேவை என கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். கண்டிப்பாக தேமுதிக திமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கும் என உறுதியளித்தேன். எங்களுடைய ஒத்துழைப்பு 100% இருக்கும் என அப்போதே தெரிவித்து விட்டேன். எனவே திமுக வேட்பாளர்களை ஆதரித்து இரண்டு தொகுதிகளிலும் பிரசாசரம் மேற்கொள்ள இருப்பதாகவும் பிரேமலதா தெரிவித்தார்.

Source: Read Full Article