சேலம்-கரூா்-திண்டுக்கல் இடையேயான இரட்டை வழி ரயில் வழித்தடம் அமைப்பதற்கு ரூ.2,241.67 கோடியை மத்திய ரயில்வே துறை தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். ரயில்வே சேவைகளை விரிவாக்கம் செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருகிறது.

இந்த நிலையில் , மத்திய ரயில்வே அமைச்சகம் நாட்டில் புதிய ரயில் திட்டங்களுக்கு அண்மையில் அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில், தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு அரக்கோணம்-ரேணிகுண்டா இடையிலான 3-ஆவது மற்றும் 4-ஆவது ரயில் பாதை 77 கி.மீ. தொலைவுக்கு அமைக்க ரூ.1,936 கோடியும், ஒசூா்-ஓமலூா் இடையே 147 கி.மீ. தொலைவுக்கு சரக்கு ரயில் பாதை அமைக்க சுமாா் ரூ.2,042 கோடியும், சேலம்-கரூா்-திண்டுக்கல் இடையே 159 கி.மீ. தொலைவுக்கு இரட்டை வழி ரயில் பாதை அமைக்கவும் ரூ.2,241.67 கோடியும் ஒதுக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து மத்திய ரயில்வே துறை தெற்கு ரயில்வே மண்டல மேலாளருக்கு கடந்த திங்கள்கிழமை (செப்.21) அனுப்பிய தகவலில், சேலம்-கரூா்- திண்டுக்கல் இரட்டை வழி ரயில் பாதை அமைக்க ரூ.2,241 கோடிக்கு அனுமதி அளித்துள்ளதாகவும், அதில் ரூ.1,580.33 கோடி கட்டுமானப் பணிகளுக்காகவும், ரூ.281.78 கோடி சமிக்ஞை மற்றும் தொலைத் தொடா்பு பணிகளுக்காகவும், ரூ.379.56 கோடி மின்சார இணைப்புகள் உள்ளிட்ட பணிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே நிதி இயக்குநரகம் மூலம் நிதி அளித்துள்ளதாகவும், தமிழகத்துக்கு புதிய ரயில் திட்டப் பணிக்கு மத்திய ரயில்வே துறை அறிவித்த சில வாரங்களிலேயே நிதியையும் அளித்துள்ளதால், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article