TN Byelection: ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?

TN Byelection: ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
News Image

TN By Election Maduranthakam Dharapuram: தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்,  திமுக மற்றும் அதிமுக மறைமுக கூட்டணி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்:

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுதாக்கல் நடைமுறை அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 9ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதில் ஆளுங்கட்சியான தவெக மட்டுமின்றி திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் நாதக என ஐந்து கட்சிகள் வேட்பாளர்களை இறக்கியுள்ளன.  வாக்குப்பதிவு நெருங்க நெருங்க தேர்தல் பரப்புரை சூடுபிடித்து வருகிறது. அதேநேரம்,  வெளியில் இருந்து பார்த்தால் இந்த தொகுதிகளில் ஐந்து முனை போட்டி நிலவுவதை போன்று காட்சியளித்தாலும், கள நிலவரம் வேறாக இருப்பதாக கூறப்படுகிறது. தவெக இரண்டு தொகுதிகளிலும் வெல்ல முனைப்பு காட்டி வரும் சூழலில், திமுக மற்றும் அதிமுக தலா ஒரு தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனவாம்.

”ஆளுக்கு ஒன்னு” - மறைமுக கூட்டணி

பொதுத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக தான் வென்று இருந்தது. ஆனால், அப்படி வென்ற சத்யபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகிய இருவருமே தங்களது பதவியை ராஜினாமா செய்து, ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்து தற்போது மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர். எனவே, அவர்களை வீழ்த்தி தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என அதிமுக விரும்புகிறது. அதேநேரம், இரண்டு தொகுதிகளிலும் வென்று சட்டமன்றத்தில் தவெக மேலும் வலுவடையக் கூடாது என திமுக விரும்புகிறது. எனவே பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் திமுக எதிரெதிர் துருவங்களாக நின்று வாக்குகளை பிரித்து, தவெகவின் வெற்றிக்கு வழிவகுப்பதை காட்டிலும், தங்களுக்கு சில சமரசங்களை செய்துகொண்டு விட்டுக்கொடுத்து, பொது எதிரியை வீழ்த்தலாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி, தாராபுரத்தை அதிமுகவும், மதுராந்தகத்தை திமுகவும் குறிவைத்து பரப்புரையை முடுக்கிவிட்டுள்ளன.

தாராபுரம் - சமூக வாக்குகளை நம்பும் அதிமுக

தாராபுரம் தொகுதியில் வென்றாக வேண்டும் என முனைப்பு காட்டும் அதிமுக, மதுராந்தகத்தில் இன்னும் பரப்புரையை கூட முழு வீச்சில் முன்னெடுக்கவில்லை. அங்கு பெயரளவிற்கு மட்டுமே கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், தாராபுரத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர்களின் வாக்குகளை முழுமையாக தங்க வசம் இழுப்பதை குறி வைத்து மட்டுமே அதிமுக தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. கூடுதலாக அருந்ததியர் மற்றும் முதலியார் போன்ற பிற சமூக வாக்குகளையும் கணிசமாக வாங்கினால் அமோக வெற்றி பெறலாம் என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறாராம். அதன் மூலம் கொங்கு பகுதி இன்றளவும் அதிமுகவின் கோட்டை தான் என நிரூபிக்கவும் அதிமுக முனைப்பு காட்டுகிறதாம். இந்த தொகுதி எப்போதும் தங்களுக்கு சாதகமாக இருந்தது இல்லை என்பதால் திமுக இங்கு பெரிய அளவில் கள வேளைகளில் ஈடுபடவே இல்லையாம்.

இதையும் படியுங்கள்: Chennais Elevated Metro: 6 வழி மேம்பால சாலையுடன் 23KM நீளத்திற்கு புதிய மெட்ரோ.. மஹிந்த்ரா சிட்டி டூ கிளம்பாக்கம் - விவரம்

மதுராந்தகம் - உதயநிதி தீவிரம்

மறுமுனையில் சென்னைக்கு அடுத்து உள்ள மதுராந்தகம் தொகுதியில் வென்று தவெகவிற்கு பின்னடைவை ஏற்படுத்த திமுகவும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி தீவிரமாக முயன்று வருகிறார். இதற்காக கட்சியின் ஒட்டுமொத்த முக்கிய நிர்வாகிகளும் அங்கு களமிறக்கப்பட்டுள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதிமுகவின் திரைமறைவு ஆதரவும் இருப்பதாக கூறப்படுவதால், உடன்பிறப்புகள் இங்கு உற்சாகமாக பணியாற்றி வருகின்றனராம்.

தவெக சமாளிக்குமா? விஜய் வியூகம் பலிக்குமா?

திமுக, அதிமுகவை போன்று இல்லாமல் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதால், தவெகவினர் தான் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நாலாபுறமும் வாக்கு சேகரிப்பில் மும்முரமாக உள்ளனர். ஆனாலும், போட்டி கடுமையாக உள்ளதால் முதலமைச்சர் விஜய் இங்கு பரப்புரை மேற்கொண்டால் மட்டுமே, தவெகவிற்கு ஆதரவு என்பது வலுப்பெறக்கூடும் என நிர்வாகிகள் நம்புகின்றனர். அதன்படி, இரண்டு தொகுதிகளிலு தலா இரண்டு நாட்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதனால், திமுக மற்றும் அதிமுகவின் அனுபவ கணக்கு பலிக்குமா? பொதுத்தேர்தலில் தவறிய வெற்றியை இடைத்தேர்தலில் விஜய் வசமாக்குவாரா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks