அக்டோபர் மாதத்தில் 11 நாட்கள் வங்கிகள் மூடல்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

அக்டோபர் மாதத்தில் 11 நாட்கள் வங்கிகள் மூடல்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
News Image

வங்கி ஊழியர் சங்கங்கள் இணைந்து செப்டம்பர் 28 தொடங்கி செப்டம்பர் 30-ஆம் தேதி வரையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் மன்றம் இணைந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன. அதன் பிறகு தற்போது பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்த நிலையில் நேற்று முதல் வங்கிகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தை கருத்தில் கொண்டு ஒரு சில ஏடிஎம்களில் நேற்றே பணம் தீர்ந்து போனதைக் காண முடிந்தது.

இந்நிலையில் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக எழுந்த செய்தி உண்மையிலேயே மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது. இது ஒரு புறம் இருக்க அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அட்டவணைப்படி வருகின்ற அக்டோபர் மாதத்தில் 11 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அது எந்தெந்த தினங்கள் என்பதை தெரிந்து கொண்டால் முன்கூட்டியே வங்கிக்கு சென்று செய்ய வேண்டிய வேலைகளை முடித்துக் கொள்ளலாம். UPI மற்றும் ஏடிஎம் மையங்கள் விடுமுறை தினங்களில் பயனுள்ளதாக இருந்தாலும்.

ஒரு சில சேவைகளுக்கு கட்டாயம் வங்கிகளுக்குச் சென்றாக வேண்டும். அப்படி நகை மீட்பதற்கு, நகை அடமானம் வைப்பதற்கு அல்லது பிற சேவைகளுக்காக வங்கி கிளைக்கு செல்ல திட்டமிடும் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே மாநில வாரியான விடுமுறையை சரிபார்த்துக் கொள்வது நல்லது. அக்டோபர் மாதத்தின் தொடக்கமே விடுமுறையில் தான் தொடங்குகிறது. அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி. அன்று நாடு முழுவதும் உள்ள எல்லா வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 10: மாதத்தின் 2வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை. அதோடு மஹாலயா அமாவாசையும் சேர்ந்து வருகிறது. இதனால் பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் வங்கிகளுக்கு விடுமுறை.

அக்டோபர் 17: சனிக்கிழமை மகா சப்தமி காரணமாக திரிபுராவில் வங்கிகளுக்கு விடுமுறை.

அக்டோபர் 19: திங்கட்கிழமை தசரா, மகா அஷ்டமி போன்ற பண்டிகைகளின் காரணமாக அகர்தலா, ஐஸ்வால், புவனேஸ்வர், சென்னை, குவஹாத்தி, இம்பால், இடாநகர், கோஹிமா, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி மற்றும் ஷில்லாங் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.

அக்டோபர் 20 தொடங்கி 23 வரை : விஜயதசமி, துர்கா பூஜை போன்ற பண்டிகைக்காக கேங்டாக், இம்பால், அகர்தலா, பெங்களூரு, குவஹாத்தி, கொச்சி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் விடுமுறை. சில மாநிலங்களில் தொடர்ந்து விடுமுறை இருக்கலாம் சில மாநிலங்களில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இருக்கலாம்.

அக்டோபர் 26: திங்கட்கிழமை லட்சுமி பூஜை, மகரிஷி வால்மீகி பிறந்தநாள் போன்றவற்றுக்காக அகர்தலா, சண்டிகர், ஜம்மு, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் போன்ற இங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.

அக்டோபர் 29: வியாழக்கிழமை கர்வா சௌத் காரணமாக சிம்லாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

அக்டோபர் 31: நான்காவது சனிக்கிழமை, சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள். இதன் காரணமாக அகமதாபாத் போன்ற மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை. தமிழ்நாட்டில் வழக்கமான விடுமுறை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் வங்கி கிளைகள் மூடப்பட்டாலும் டிஜிட்டல் சேவைகளை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தலாம். ஏடிஎம்கள், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யூபிஐ தளங்கள் போன்றவை தொடர்ந்து செயல்படும். இருந்தாலும் செக் பரிவர்த்தனைகள் மற்றும் கிளை சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். இதில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை சேர்க்கப்படவில்லை அதையும் சேர்த்தால் இன்னும் கூடுதலான விடுமுறை நாட்கள் வரலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks