சமையல் எரிவாயு: 250% கூடுதல் விலை! எண்ணெய் நிறுவனங்களின் லாபவெறிக்கு அன்புமணி கண்டனம்

சமையல் எரிவாயு: 250% கூடுதல் விலை! எண்ணெய் நிறுவனங்களின் லாபவெறிக்கு அன்புமணி கண்டனம்
News Image

சென்னை: வளைகுடா போரைக் காரணம் காட்டி புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதை நிறுத்திவிட்டு, 250% கூடுதல் விலைக்கு எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்களின் லாபவெறி அணுகுமுறைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

வளைகுடா போரைக் காரணம் காட்டி, தமிழ்நாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்கான புதிய சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளதாகவும், புதிய இணைப்பு கோருவோருக்கு 250% அதிக விலையில் 10 கிலோ சமையல் எரிவாயு வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் இன்றியமையாதத் தேவைகள் விஷயத்தில், சேவை அணுகுமுறைக்கு பதிலாக எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிக்கும் இலாபமீட்டும் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து எரிபொருள்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இரு நாடுகளும் சில வாரங்களுக்கு முன் போர்நிறுத்தம் அறிவித்ததைத் தொடர்ந்து இயல்பு நிலை திரும்பினாலும் கூட, ஒரு சில நாள்களில் போர்நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து எரிவாயுவுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருகின்றன.

அதையே காரணம் காட்டி, இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்களும் புதிய சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளன. அதுமட்டுமின்றி, கடந்த ஜூன் மாதம் முதல் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இன்னும் புதிய இணைப்புகள் வழங்கப்படவில்லை. மாறாக, புதிய இணைப்பு கோருவோருக்கு தற்காலிக தலா 10 கிலோ எடை கொண்ட இரு எரிவாயு உருளைகளை ரூ.9250 வரை கட்டணம் வசூலித்துக் கொண்டு வழங்குகின்றன. அதில் ரூ.6000 திரும்பப்பெறக் கூடிய பாதுகாப்பு டெபாசிட் என்றும், மீதமுள்ள ரூ.3250 சமையல் எரிவாயுக்கான விலை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது பெரும் கொள்ளை ஆகும்.

சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளை ரூ.936-க்கு வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு கிலோவுக்கான விலை ரூ.65.91 ஆகும். அதே விலையில் வழங்குவதென்றால், தலா 10 கிலோ எடையுள்ள இரு எரிவாயு உருளைகளுக்கு ரூ.1318.30 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், அதை விட இரண்டரை மடங்கு அதிகமாக ரூ.3250க்கு விற்பனை செய்வதை அனுமதிக்க முடியாது.

எரிவாயு தட்டுப்பாடு தான் காரணம் என்றால், 10 கிலோ எரிவாயு உருளைகள் மட்டும் தாராளமாக வினியோகிக்கப்படுவது எவ்வாறு? வீட்டுப்பயன்பாட்டுக்காகத் தான் சமையல் எரிவாயு வாங்குகிறோம் என்பதற்கான சான்றுகளை வாடிக்கையாளர்கள் வழங்கும்பட்சத்தில், தற்காலிக ஏற்பாடாக 10 கிலோ எரிவாயு உருளைகளை ரூ.659க்கும் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பது ஏன்?

புதிய இணைப்புகளை வழங்க முடியாது என்று கூறி விட்டு, 250% கூடுதல் விலைக்கு சமையல் எரிவாயு உருளைகளை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்வது சேவையல்ல... அது பெரும் இலாபமீட்டும் பேராசை ஆகும். மக்களைச் சுரண்டும் இந்த அணுகுமுறையை கைவிட்டு, புதிய இணைப்பு கோருபவர்களுக்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும். அது சாத்தியமில்லை என்றால் 10 கிலோ உருளைகளை ரூ.659 என்ற விலையில் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks