அக்டோபர் 1 முதல் மாறும் நிதி விதிகள்: LPG விலை முதல் UPI கட்டணம் வரை முழு விவரம்

அக்டோபர் 1 முதல் மாறும் நிதி விதிகள்: LPG விலை முதல் UPI கட்டணம் வரை முழு விவரம்
News Image

அக்டோபர் மாதம் நம் பட்ஜெட், சேமிப்பு, முதலீடு, தொழில்கள் என அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய பல நிதி சம்பந்தப்பட்ட மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. பொதுமக்கள் இந்த மாற்றங்களை தெரிந்து கொள்வது கட்டாயம்.

எல்பிஜி சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் எல்பிஜி சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் ஈரான் போர் நிலவரம், எல்பிஜி வரத்து ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலைகளை மாற்ற வாய்ப்புள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாறவில்லை என்றாலும் வணிக ரீதியான சிலிண்டர் விலை மாற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

டெபாசிட் விதிகள்: இந்திய ரிசர்வ் வங்கி டெபாசிட்கள் தொடர்பான புதிய நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. ஒரே மாதிரியான வைப்புத்தொகை, ஒரே கால அளவு கொண்ட டெபாசிட்களுக்கு அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான வட்டி விகிதம் வழங்கப்பட வேண்டும். கிளைவாரியாக வட்டி விகிதங்களை மாற்றி அமைக்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகள் தங்களின் மொத்த வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்குள் தங்களது இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும்.

யூபிஐ கட்டணங்கள்: 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வணிக பேமெண்ட்களுக்கு யூபிஐ பயன்படுத்தினால் அதற்கு அந்த வணிகர் எம்டிஆர் கட்டணமாக 0.40% ஐ செலுத்த வேண்டும். இது வரும் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. சாதாரண மக்கள் மேற்கொள்ளும் person - to- person பரிவர்த்தனைகள் எப்போதும்போல முற்றிலும் இலவசம். அதாவது நண்பர்கள், உறவினர்களுக்கு பணம் அனுப்புவது, போன்றவற்றுக்கு எந்த கட்டணமும் இல்லை. ஆனால் வணிகர்களுக்கு 2000 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தினால் அந்த வணிகர் தான் இந்த 0.40% எம்டிஆர் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ஓய்வூதியத் திட்டம் கட்டண மாற்றங்கள்: என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கான கட்டண கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. PoP (Point of Presence) மூலமாக பதிவு செய்யும் புதிய சந்தாதாரர்கள் நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) பெற ஒருமுறை தொகையாக 200 ரூபாய் ஆன்-போர்டிங் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

சிறு சேமிப்பு திட்ட வட்டி விகிதங்கள்: செல்வமகள் சேமிப்பு திட்டம் , பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கான காலாண்டு வட்டி விகிதங்களை அரசு அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்காக மறுஆய்வு செய்து இன்று அறிவிக்கும். ஒரு வேளை வட்டி மாறினால் அது அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும். அக்டோபர் மாதம் தொடங்கும் இந்த புதிய நிதி விதிகள் உங்களின் மாதாந்திர பட்ஜெட், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் சேமிப்புகளை நேரடியாக பாதிக்கக்கூடியவை. எனவே, அதற்கு தகுந்தவாறு உங்கள் நிதிகளை திட்டமிட்டு கொள்வது நல்லது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks