Udhayanidhi Stalin: விவசாயிகள் பிரச்னை.. சட்டசபையில் சும்மா விடமாட்டோம்.. விஜய்க்கு உதயநிதி எச்சரிக்கை!

Udhayanidhi Stalin: விவசாயிகள் பிரச்னை.. சட்டசபையில் சும்மா விடமாட்டோம்.. விஜய்க்கு உதயநிதி எச்சரிக்கை!
News Image

விவசாயிகள் பிரச்னையை சட்டமன்றத்தில் எழுப்பி தவெக அரசை சும்மா விட மாட்டோம் என  எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகதாது அணைக் கட்டுவதை தடுத்தே ஆக வேண்டும். முக்கியமாக டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆறு முழுக்க தண்ணீர் ஓடும். காவிரி டெல்டா இன்றைக்கு வறண்ட பாலைவனம் போல காட்சியளிக்கிறது. இது திமுக ஆட்சியில் இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. குறுவை சாகுபடியை காப்பாற்ற முடியவில்லை. இதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. டம்மி முதலமைச்சரால் தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை மு.க.ஸ்டாலின் திறந்து விட்டுள்ளார்.

2026ம் ஆண்டு ஜூன், ஜூலை முடிந்து ஆகஸ்ட் வந்தும் தண்ணீர் வரவில்லை. ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இதுபற்றி முதல்வர் விஜய் வாயை திறந்து பேசவில்லை. திமுக மேல் என்ன பொய் வழக்கு போடலாம் என்பதை சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த காங்கிரஸ் தயவு வேண்டும். அதனால் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸை கேள்வி கேட்க துப்பில்லை. எதிர்த்து கேள்வி கேட்க பயப்படுகிறார். ஒன்றிய அரசையும்  எதிர்த்து பேச மாட்டார். பாஜக என்ற வார்த்தையை சொல்ல முடியாத தைரியசாலிகள்.

நேற்று டெல்லியில் போராட சென்ற தமிழக விவசாயிகள் மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்தில் வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். அதனை கண்டித்து மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். ஆனால் முதலமைச்சர் விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏனென்றால் மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி நடப்பதால் தான். முதலமைச்சர் விஜய்க்கு ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சுயநலம் உள்ளது.

ஒட்டுமொத்த விவசாயிகளும் அரசுக்கு எதிராக திரும்பியது கர்நாடகாவுக்கு செல்லப் போகிறேன் என ரீல் விட்டார். எதிர்க்கட்சிகள் அங்கு போக வேண்டாம் என சொன்னார்கள். ஆனால் கர்நாடக முதலமைச்சர் இங்க வராதீங்க, ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது என சொன்ன பிறகு தான் அமைதியானார். விவசாயிகள் மேல முதலமைச்சருக்கு வன்மம் உள்ளது. நீர்வளத்துறை அமைச்சர், வேளாண் அமைச்சர் அமைச்சர்களின் லட்சணம் மோசமாக உள்ளது. மொத்த அமைச்சரவையும் ஜோக்கர் கூட்டமாக அமைந்துள்ளது. ரீல்ஸ் வெறி அரசுக்கு முற்றிப்போயுள்ளது.

Also Read: ‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!

வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றாமல் வாயில் வடை சுடுவது தான் தவெக அரசு. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதை அவமானமாக கருதுகிறார். தேர்தல் அறிக்கையில் சொன்னபடி விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஆகஸ்ட் 5ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த விவசாயிகள் பிரச்னையை பற்றி பேசுவோம். சும்மா விடமாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks